பம்பர கண்ணு.. பச்ச மொளகா-ன்னு ஆட்டம் போட்ட.. நடிகை ரக்‌ஷிதா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

குஷ்புவை போலவே கொழுக் மொழுக் நடிகை ரக்‌ஷிதா, இவர், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், ‘தம்’ படத்தில், சிலம்பரசனுடன் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில்,‘‘சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்’ என்ற பாடல் காட்சியில், கிளாமராக நடித்து இளசுகளையும், பெருசுகளையும் ஏக்க பெருமூச்சு விட்டு ஏங்க வைத்தவர்தான் இவர்.

விஜய் உடன், 2004ல் ‘மதுர’ படத்தில் நடித்திருந்தார். இதில், சோனியா அகர்வால், சீதா, வடிவேலு ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தில், படுகவர்ச்சியான காட்சிகளில் நடித்து, ரசிகர்களை கிறங்கடித்திருப்பார் ரக்‌ஷிதா, அதுவும், பாடல் காட்சிகளில், கிளாமரை அள்ளி தெளித்திருப்பார்.

தமிழில் பெரிய அளவில் ரக்‌ஷிதாவுக்கு படங்கள் இல்லை என்றாலும், கன்னடம், தெலுங்கு படங்களில் அதிகமாக ரக்‌ஷிதா நடித்திருக்கிறார். கன்னட படங்களின் தயாரிப்பாளராகவும் இவர் இருக்கிறார்.

கடந்த 2007 ம் ஆண்டு, பிரபல கன்னட இயக்குநர் பிரேம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட ரக்‌ஷிதா, கன்னடத்தில் அதிக படங்களில் நடித்திரருக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் புத்தகங்கள் வாசிப்பதிலும், இசை கேட்பதிலும், வெளியூர்களுக்கு பயணம் செல்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் நாகார்ஜூனா, ரவிதேஜா ஹீரோக்களுடன் அதிகமாக படங்களில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

சமீபத்தில், குடும்பத்தினருடன் ரக்‌ஷிதா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. படங்களில் நடிக்கும்போதே குண்டாக இருந்த அவர், 20 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதும் அதைவிட பலமடங்கு குண்டாக தெரிகிறார். அட, மதுர படத்தில் நடித்த ரக்‌ஷிதாவா இது, என புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு போகின்றனர்.

ரக்‌ஷிதா மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் பல நடிகைகள் பிற மொழிகளில் இருந்து வந்து நடித்திருக்கின்றனர். அபாரமான நடிப்பு திறனும், அர்ப்பணிப்புடன் நடிக்கும் பல நடிகைகள், சரியாக கதைகளை தேர்வு செய்து நடிக்காததால், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை இழந்து விடுகின்றனர். அந்த வகையில், ரக்‌ஷிதாவும் ஒருவர்.

பிறமொழிகளில் இருந்து தமிழ் படங்களில் நடிக்க வரும் நடிகைகள், வந்த வேகத்தில் திரும்பிச் சென்று விடுவதும் நடக்கிறது. ஆனால், சில நடிகைகள் தமிழ் படங்களின் நிரந்தரவாசிகளாக மாறி, தமிழ் படங்களிலேயே தொடர்ந்து நடிக்கின்றனர் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …