Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

நாட்டுக்கோழி.. டார்க் சாக்லேட்.. பதின்ம வயதில் நீச்சல் உடையில் நடிகை ரோஜா..!

இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் திரைப்படமாக அமைந்தது.

மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குனரான ஆர்.கே செல்வமணியைதான் பிறகு நடிகை ரோஜா திருமணம் செய்து கொண்டார். சூரியன், உழைப்பாளி ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த திரைப்படங்கள் ஆகும்.

பிறகு அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமான பொழுது 1992ல் அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வந்திருந்தன. அதற்கு அடுத்த வருடம் அவரது நடிப்பில் ஒரே ஒரு திரைப்படம்தான் வந்திருந்தது.

மார்க்கெட்டை பிடித்த ரோஜா:

எனவே ரோஜா பெரிதாக மார்க்கெட்டை பிடிக்க மாட்டார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அதற்கு அடுத்த வருடமே அதிரடியாக அவரது நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியாகியது. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது.

2001 வரை அதிகமான திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வந்த ரோஜா கோட்டை மாரியம்மன் திரைப்படத்திற்கு பிறகு வாய்ப்புகளை இழக்க தொடங்கினார். அதற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ரோஜா. இவர் பிரபலமாக இருந்த காலகட்டங்களில் அவருக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வந்தது. அதே சமயம் தெய்வ பக்தி கொஞ்சம் அதிகமாக கொண்டவர் ரோஜா.

அம்மன் படத்திற்கு பிறகு இல்லாமல் போன மார்க்கெட்:

அதனால்தான் அவரது நூறாவது திரைப்படமாக பொட்டு அம்மன் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் கோட்டை மாரியம்மன் திரைப்படத்திற்கு பிறகுதான் அவருக்கு வாய்ப்புகளும் குறைய தொடங்கியது.

ஆரம்பத்தில் ரோஜா அதிகமாக கவர்ச்சி காட்டி நடித்த காரணத்தினால் அவர் அம்மனாக நடித்த பொழுது அது அவ்வளவிற்கு வரவேற்பை பெறவில்லை. அதனால்தான் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இளம் வயதில் ரோஜா போட்டோ சூட் மூலம் பத்திரிகைகளுக்காக சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது அதிக வைரலாகி வருகின்றன. மேலும் அவற்றை பகிரும் ரசிகர்கள் ஆரம்ப காலகட்டங்களில் டார்க் சாக்லேட் போல கருப்பு நிறத்தில் அழகாகதான் ரோஜா இருந்திருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

Continue Reading

More in Actress

Trending

To Top
Exit mobile version