Tuesday, September 24

பக்கத்து வீட்டுக்காரருடன் நடிகை திரிஷாவிற்கு நடந்த விஷயம்? நீதிமன்றத்தில் திரிஷா சொன்ன அந்த வார்த்தை பற்றி கொண்ட பரபரப்பு..

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் இவர் இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கி சிக்ஸர்களையும், பவுண்டர்களையும் அடித்து நொறுக்கி வருகிறார்.

தற்போது முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த கோட் திரைப்படத்தில் ஒரு நடனம் ஆடி அனைவரையும் அதிரவிட்டார்.

பக்கத்து வீட்டுக்காரருடன் நடிகை திரிஷாவிற்கு நடந்த விஷயம்?

இந்நிலையில் நடிகை திரிஷா தனது வீட்டில் இருக்கும் மதில் சுவர் பிரச்சனையால் பக்கத்து வீட்டுக்காரரோடு பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தற்போது அந்த பிரச்சனை சமூகமாக சமரசம் செய்து கொண்டதாக தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை திரிஷா சொன்னதை அடுத்து அந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்ததோடு நடிகை திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவு துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

சென்னையில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடு ஒன்று நடிகை திரிஷாவிற்கு சொந்தமாக உள்ளது. இந்த வீட்டை அவர் 2015 ஆம் ஆண்டு வாங்கி இருந்தார். மேலும் 2023 மெய்யப்பன் என்பவர் ஒரு வீட்டை வாங்கியதை அடுத்து கட்டிடத்தை இடித்து சில வேலைகளை செய்து இருக்கிறார்.

இந்நிலையில் மெய்யப்பன் வீட்டிற்கும் திரிஷா வீட்டிற்கும் இடையே இருக்கின்ற பொதுசுவர் இடிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் நடிகை திரிஷா அந்தச் சுவரை இடிக்க கூடாது என்று வீட்டுக்காரருக்கு தடை கோரி மனு ஒன்றை தாக்கல் செய்து வைத்திருந்தார்.

நீதிமன்றத்தில் திரிஷா சொன்ன அந்த வார்த்தை பற்றி கொண்ட பரபரப்பு..

மேலும் அந்தப் பகுதியில் மெய்யப்பன் மீண்டும் கட்டுமான பணிகளில் ஈடுபடக்கூடாது, அதற்கான நிரந்தர தடையை விதிக்க வேண்டும் என்று நடிகை திரிஷா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த சிவில் வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது. ஏற்கனவே இந்த வழக்கானது கடந்த ஜனவரி மாதம் தொடரப்பட்ட நிலையில் இது குறித்து நீதிபதி விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.

தற்போது வரை அந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கு விசாரணை மேற்கொண்ட சூழ்நிலையில் இரு தரப்பினரும் கோர்ட்டுக்கு வெளியே சமரசமாக இந்த விஷயத்தை முடித்துக் கொண்டதாக சொல்லப்பட்டது.

அது தொடர்பான அறிகையும் தாக்குதல் செய்யப்பட்ட நிலையில் வழக்கை முடித்து வைத்த நீதிபதி நடிகை திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டடத்தை திருப்பி அளிக்க உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.