Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? கிறுகிறுக்க வைத்த பிக்பாஸ் வனிதா..!

நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளா தம்பதியினரின் வாரிசுகளில் எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒருவராக இருந்து வருபவர் வனிதா விஜயகுமார்.

ஆரம்பத்தில் வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பதைதான் குறிக்கோளாக கொண்டிருந்தார். விஜய் நடித்த சந்திரலேகா என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை வனிதா விஜயகுமார்.

ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த மாணிக்கம் என்கிற திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை இழந்தார் வனிதா விஜயகுமார் என்று தான் கூற வேண்டும்.

மார்க்கெட்டை இழந்த நடிகை:

1996 ஆம் ஆண்டு மாணிக்கம் என்கிற திரைப்படம் வந்தது அதற்கு பிறகு 2013 வரை தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை. அதற்குப் பிறகு நடித்த திரைப்படங்களிலும் சொற்பமான கதாபாத்திரங்களில்தான் நடித்தார் விஜயகுமார்.

---- Advertisement ----

 

இதற்கு நடுவே அவரது சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருந்தன. சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகுதான் வனிதாவின் சொந்த வாழ்க்கை குறித்த விஷயங்கள் அதிகமாக இணையத்தில் வலம் வர துவங்கின.

முக்கியமாக அவர் விவாகரத்து செய்வதும் மறுமணம் செய்வதும் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளான ஒரு விஷயமாக மாற துவங்கியது. இதனை தொடர்ந்து வனிதா விஜயகுமாரின் கூட பிறந்தவர்களே அவரை விமர்சித்து கருத்துக்கள் கூற ஆரம்பித்தனர்.

பிரபலமான வனிதா:

அதேபோல வனிதா விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தை குறித்து நிறைய சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வந்தார். வனிதா விஜயகுமாரை மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலப்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சிதான் எனக்கூறலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிக பிரபலமானார் வனிதா.

 

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் தொடர்ந்து நடக்கும் நிறைய நிகழ்ச்சிகளில் இப்போது வரை கலந்து கொண்டு வருகிறார் வனிதா விஜயகுமார். இந்த நிலையில் தற்சமயம் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறாராம் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தற்சமயம் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்கு சம்பளமும் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவர் டூ பீஸ் உடையில் கவர்ச்சியாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த ஒரு தகவல் தற்சமயம் சமூக வலைதளங்களில் தீயாய்ப பரவி வருகிறது. மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு விஷயமாகவும் இது இருக்கிறது. ஏனெனில் தற்சமயம் நடிகை ஆகும் வயதில் மகளைக் கொண்ட வனிதா விஜயகுமார் மீண்டும் கவர்ச்சியாக நடிக்க போகிறாரா என்பதே இந்த அதிர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இதனை அடுத்து ரசிகர்கள் இவ்வளவு பெரிய உடம்புக்கு இவ்வளவு சின்ன நீச்சல் உடை போதுமானதா என்று கேட்டு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Continue Reading

More in Actress

Trending

To Top