அதிதி ஹீரோயினாக நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யாருன்னு தெரியுமா..? – வைரல் அப்டேட்..!

தமிழில் அதிக பொருள் செலவில் உருவான பல படங்களை இயக்கிய பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் சங்கர் அவர்கள் தான்.

எஸ். பிக்சர் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.பிரம்மாண்டம் என்றாலே ஷங்கர் என்னும் அளவிற்கு அவரது படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளால் மிரட்டி இருப்பார்.

உலக நாயகன் கமல் நடித்த இந்தியன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன், சியான் விக்ரம் நடித்த ஐ மற்றும் அந்நியன், இளையதளபதி விஜய் நடித்த நண்பன் சித்தார்த், ஜெனிலியா, பரத் ஆகியோர் அறிமுகமாகிய பாய்ஸ் போன்ற திரைப்படங்கள் இயக்குனர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்கவை.

இவரது படங்கள் அனைத்தும் சமூக மாற்ற கருத்துகளுக்காகவும், தொழில்நுட்ப உதவியுடன் அமைத்த கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டம் போன்றவற்றிற்காக பேசப்படும்.

இயக்குனர் அவர்களின் மகளும் நடிகையுமான அதிதி சங்கர் பிரபல இயக்குனர் விஷ்ணுவரதன் அவர்களின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர்  விஷ்ணுவரதன் பில்லா பில்லா 2 ஆரம்பம் போன்ற மூன்று வெற்றி படங்களை தல அஜித்தை வைத்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கார்த்திக் நடிப்பில் வெளியாகிய விருமன்  என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அதிதி சங்கர் அறிமுகமானார்.

விரும்பன் படத்தில் தேன்மொழி என்னும் கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

முதல் படத்திலேயே தனது யதார்த்த நடிப்பில் ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தார் இதனால் முன்னணி கதாநாயகியாக இவர் விரைவில் மாறுவார் என்பதில் ஐயமில்லை.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் என்னும் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

வாரிசு நடிகையாக திரையுலகில் அறிமுகம் ஆயிருந்தாலும் தனது எதார்த்த நடிப்பால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அதிதி சங்கர் அவர்களின் திரைப்பயணம் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …