முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை அதிதி ஷங்கர்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை அதிதி ஷங்கர்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழில் விருமன், மாவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் அதிதி சங்கர் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிரபல இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் விருமன் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார்.

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.

தற்போது இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அதிதி சங்கர்.

பின்னணி பாடகி ஆகவும் ரசிகர்களுக்கு மத்தியில் அறியப்படுகிறார் அதிதி சங்கர். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழியில் வெளியான ஃகானி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையில் ரோமியோ ஜூலியட் என்ற பாடலை பாடியிருந்தார்.

அதன் பிறகு விருமன் திரைப்படத்தில் மதுர வீரன் அழகுல.. என்ற பாடலை பாடிய இவர் மாவீரன் திரைப்படத்தில் வண்ணாரப்பேட்டையில என்ற பாடலை பாடியிருந்தார்.

இதே பாடலை தெலுங்கு பதிப்பிலும் பங்காருபேட்டலோனா என்ற பாடலை பாடியிருந்தார். இந்நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் அடிக்க உள்ள அதிதி ஷங்கர் முதல் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மொத்தமாக 10 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version