&Quot;ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்..&Quot; - நான் கடவுள் பட பாடல் - குலை நடுங்க வைக்கும் அர்த்தம்..!

“ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்..” – நான் கடவுள் பட பாடல் – குலை நடுங்க வைக்கும் அர்த்தம்..!

தமிழ் சினிமாவில் எவ்வளவோ இயக்குனர்கள் இருக்கிறார்கள். யார் இயக்கிய படத்தையும்.. யார் வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால், இயக்குனர் பாலா படங்களை ரசிக்க, புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ரசிகர்களுக்கு சில தகுதி வேண்டும் என்று கூறுவார்கள்.

இயக்குனர்களில் ஒரு அரக்கன் என்று அவரை கூறலாம். கலை பித்தன் என்று பாலாவை பலரும் கூறுவார்கள். அவரது, படங்கள் அழ வைத்துவிடும் என்பதை காட்டிலும் ஆழமான கருத்து நிறைந்தவை என்பதால் பாலா படங்களுக்கு என தனி ரசிகர் வட்டம் உள்ளது.

ஹீரோவிற்காக படத்தை பார்க்கலாம் என்ற காலங்கள் தாண்டி யாருப்பா! இந்த டைரக்ட்டர்? இவருக்காகவே படம் பார்க்கலாம் என்ற நிலைப்பாட்டிற்கு மக்கள் வர காரணமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர்.

இவரது படத்தில் வரும் ஒவ்வொரு துணை கதாபாத்திரமும் நம்மை ரசிக்க வைக்கும். குறிப்பாக வசனங்கள். அப்படித்தான் ‘நான் கடவுள்’ படத்தில் அகோரியாக நடித்துள்ள ஆர்யாவின் வசனங்களை கவனித்து இருக்கிறீர்களா..?

இவர் பேசும் வசனங்கள் சில சிவவாக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆகியே;
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும் துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே!

(தூமை – பெண்கள் மாதவிடாய் காலத்தில் வெளியேறுகின்ற உதிரம்)

சிவ வாக்கியத்தில் இடம்பெற் 207-வது பாடல் இது. இந்த பாடலின் பொருள், ஐந்திரண்டு (5×2=10) திங்கள் ( முழு நிலவு ) மாதம் ஒரு நிலவு என பத்து முழு திங்களாக கருப்பையில் அடங்கி விட்ட தூமை தான் இரண்டு கை, இரண்டு கால், இரண்டு கண் ஆகி, உயிராகி, சத்தம் கேட்கும் காதுகளும், ரசமாகிய சுவை உணர வாயும், காந்தமாகிய நாற்றம் உணர மூக்கும் தோன்றி சுத்தமான உடம்பானதற்கு காரணம். என்பது தான் இப்பாடலின் அர்த்தம்.

 

&Quot;ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்..&Quot; - நான் கடவுள் பட பாடல் - குலை நடுங்க வைக்கும் அர்த்தம்..!கிராமப்புறங்களில் தூமையகுடுக்கி என்று சிலர் திட்டுவதை கேட்டிருப்பீர்கள். இது கெட்ட வார்த்தை, கொச்சை சொல் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. யோசித்து பாருங்கள்.. இந்த உலகில் உருவான ஒவ்வொரு மனிதனும் அந்த தூமையில் இருந்து வளர்ந்தவன் தான். அதனை குடித்தே கண், காது, மூக்கு, மூளை என அனைத்தையும் கருவாக்கி, உருவாக்கி இன்று மனித உருவில் உலவிக்கொண்டிருக்கிறோம்.

தூமை என்றால் இழி சொல்லா..?

தூமை என்பது பெண்களை இழுவுபடுத்தும் சொல் என்பது தவறு. தன்னை, முற்போக்காளர்கள் என்று பிதற்றிகொள்ளும் சிலர் இந்தியாவில் வாழும் மக்கள் மாதவிடாய் ஆன பெண்களை தீட்டு என்று வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இது கேவலம் என்று ஓலமிடுவார்கள்.

அப்படியானவர்களை கண்டால் கீழே உள்ள தகவலை புரிய வையுங்கள். தீட்டு என்று நம் வீட்டு பெண்களை ஒதுக்கி வைக்க முதல் காரணம், அவர்கள் அதிகப்படியான வேலை செய்ய கூடாது என்பதற்காக மட்டும் தான்.

இந்த நவீன காலத்தில், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த நாப்கின்கள், டேம்போன்ஸ் (Tampons), மாதவிடாய் குவளைகள் (Menstrual Cups) என எத்தனையோ உபகரணங்கள் வந்துவிட்டன. ஆனால், அந்த காலத்தில் இப்படியான வசதிகள் இருக்கவில்லை.

&Quot;ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்..&Quot; - நான் கடவுள் பட பாடல் - குலை நடுங்க வைக்கும் அர்த்தம்..!

இதனால், பெண்கள் அதிகம் வேலை செய்தால் அதிக உதிர போக்கு ஏற்பட்டு உடல்நிலை கெட்டுவிடும் என்பதாலும் வசிக்கும் வீட்டில் உதிரம் சிந்தினால் நோய் தோற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படி உதிரம் சிந்தினால் செல்லப்பிராணிகள், பூனை, நாய் போன்றவை சிறு சிறு பூச்சிகள் அதனை நோக்கி வர வாய்ப்பு உள்ளது.

இப்படியான காரணுங்களுக்காக மட்டுமே தீட்டு என்று ஒதுக்கி அவர்களை தனிமைப்படுதினார்களே தவிர, சோ கால்டு முற்போக்காளர்கள்.. அய்யோ பெண்களை ஒதுக்கி வைக்கிறார்கள்.. கேவலமாம்.. அசிங்கமாம் என கதறுவதெல்லாம் குறிப்பிட்ட மதத்தை இழிவு படுத்த வேண்டும் என்பதால் மட்டுமே தவிர, அவர்கள் அடித்து விடும் கட்டுக்கதைகளில் நூல் அளவும் உண்மை இல்லை.

குலைநடுங்க வைக்கும் உண்மை

ஆம், மேலே சொன்னது தான் குலை நடுங்க வைக்கும் உண்மை. சோ கால்டு முற்போக்காளர்களின் குலையை நடுங்க வைக்கும் உண்மை. சமீபகாலமாக அப்படியான முற்போக்காளர்களின் சத்தம் அதிகமாக உள்ளது. அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. காலம் அவர்களை பார்த்துக்கொள்ளும் என்று விட்டுவிடுங்கள்.

சிவன் இருக்கும் போது எவன் வந்தால் என்ன..? அவனே கேள்வி, அவனே விடையும் என இருந்துவிடுங்கள்.

&Quot;ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்..&Quot; - நான் கடவுள் பட பாடல் - குலை நடுங்க வைக்கும் அர்த்தம்..!

** குறிப்பாக இந்த உண்மையை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீட்டு என்றால் நம்மை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்று அர்த்தம் அல்ல. அதன் பின், ஆரோக்கியம் மற்றும் தூய்மை சார்ந்த அறிவியல் இருக்கிறது என்று.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து படிக்க சொல்லுங்கள். அப்போது தான் பலருக்கும் தெளிவு பிறக்கும். சரி வாங்க விஷயத்துக்கு வருவோம், இந்த சிவவாக்கியத்தில் சிறு மாற்றம் ஏற்படுத்தி, அகோரியான ஆர்யா தன் தாயை பார்த்து சொல்கிறார்,

ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆகியே;
உடம்பாவது ஏதடி; உயிராவது ஏதடி!
உடம்பால் உயிரெடுத்த உண்மை ஞானி நானடி!

அதாவது படத்தில் ஆர்யாவின் அம்மா இவருடன் இருக்கும்படி கேட்க, அதற்கு ஆர்யாவோ, உன்னாலே உலகிற்க்கு வந்தேன் தாயே..! இந்த உடலையும் உயிரையும் கொடுத்தது நீ தான். ஆனால் இப்போது உடலால் உயிரை துறந்த ஞானியாகி விட்டேன்.இங்கு நான் உங்களுடன் வாழ தகுதியற்றவன் என்கிறார் ஆர்யா.

&Quot;ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்..&Quot; - நான் கடவுள் பட பாடல் - குலை நடுங்க வைக்கும் அர்த்தம்..!

எத்தனை பேர் படத்தின் இந்த வசனத்தை ஆழமாக கவனித்தீர்கள்? பாலா படத்தில் இன்னும் பல வசனங்கள் ஆழம் நிறைந்ததாக படைக்கப்படுகிறது. ஆனால் எத்தனை பேரால் கவனிக்கப்படுகிறது? என்பது சந்தேகமே!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version