கடந்த 2015ஆம் ஆண்டு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
அதனைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இடையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவருக்கு ரசிகர் மத்தியில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தன்னுடைய மோசமான நடவடிக்கைகள் காரணமாக தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டார் நடிகை ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
அந்தவகையில், தற்போது பட வாய்ப்புகளை பெற்று வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் கையில் அரை டஜன் படங்கள் இருக்கின்றன. அந்த வகையில், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேக்கா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சொல்லிக்கொள்ளும்படி பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும் தொடர்ந்து முயற்சி செய்து வரும் இவர் பட வாய்ப்புகளை பெறுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
வரக்கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் கையில் அள்ளி போட்டுக் கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா தத்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது நைட் பார்ட்டி பார்ட்டி ஒன்றில் வளைந்து நெளிந்து விவகாரமான போஸ் கொடுத்திருக்கும் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.