தமிழ் திரை உலகில் திரைப்படங்களைத் தாண்டி தற்போது வெப்சீரிஸ் களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகரித்து வருகின்றது. இதனால் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தயங்காமல் வெப்சீரிஸில் நடித்து வருகின்றனர்.
மேலும் சினிமாவில் நடித்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அதே அளவு வெப் சீரிஸ்ஸிலும் சம்பாதிக்க முடிகிறது. சினிமாவில் தணிக்கை குழு, அது இது என ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கின்றன.
ஆனால் அப்படி எதுவும் வெப் சீரிஸ்களில் இல்லை. கதைக்கு தேவையான விஷயங்களை அப்படியே கொடுக்க முடியும் என்று நடிகர் நடிகைகள் வெப்சீரிஸ் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சூழல் என்ற வெப்சைட்டில் நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸ் பிரபல OTT தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகின்றது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இதற்கான காரணம் திரைப்படங்கள் என்றால் 2 மாதங்களுக்கு ஒரு முறை 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் வெளியாகும். இதனால் ரசிகர்களிடம் நம்மால் சென்று சேர முடியாது.
ஆனால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களை நேரடியாக சென்றடைய முடியும் என்ற எண்ணம் தான் நடிகைகள் அடிக்கடி தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்த்தில் அப்லோட் செய்வதற்கு காரணம்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவறது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.