அதர்வாவை கழட்டிவிட்ட ஐஸ்வர்யா… விரைவில் லால் சலாம் படத்தில் ரஜினி…!

லைக்கா நிறுவனம் பொன்னியின் செல்வன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டு படங்களில் ரஜினியை புக் செய்து உள்ளது அனைவருக்குமே தெரியும். இதில் ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தியும் மற்றொரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

 இதனை அடுத்து ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்க உள்ள படத்தின் பெயர் மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில் எந்த படத்தின் பெயர் லால் சலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஏற்கனவே லைக்கா நிறுவனத்துடன் ஐஸ்வர்யா தனக்கு அதர்வா தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த நிலையை இப்போது முடிவை மாற்றிக்கொண்டு அதர்வாவை படத்தில் இருந்து கழட்டிவிட்டு கிரிக்கெட் ஆடத் தெரிந்த விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை இந்த படத்தின் முதன்மை கதாநாயகராக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 இதற்குக் காரணம் இந்த படத்தின் கதை அம்சம் கிரிக்கெட் பின்னணியை கொண்டிருப்பதால் இவர்கள் இருவருக்கும் நன்கு கிரிக்கெட் விளையாட தெரியும் என்பதால் தான் இவர்களை புக் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

 மேலும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வந்து நடிப்பார் என்பது கூடுதல் ஹைலைட்டான விஷயமாக இருப்பதோடு மற்றொரு ஹைலைட்டான விஷயமும் உள்ளது. அது என்ன எனில் இந்தப் படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு இருக்கிறது.

வரும் 2023 ஆம் ஆண்டு இந்த திரைப்படமானது திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுவதாக தற்போதைய அந்த போஸ்டரில் குறிப்பிட்டு இருப்பது மேலும் சிறப்பாக உள்ளது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

 இதனை அடுத்து அதர்வாவுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. விரைவில் படப்பிடிப்பை எதிர்கொள்ளப் போக இருக்கக்கூடிய இந்த பட குழு இனி இந்த படம் பற்றிய அப்டேட்டை மிக விரைவில் தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …