துக்கம் விசாரிக்க அனுமதி கேட்ட அஜித்..! கடுப்பான கேப்டன் குடும்பத்தினர்..! என்ன நடந்தது..?

துக்கம் விசாரிக்க அனுமதி கேட்ட அஜித்..! கடுப்பான கேப்டன் குடும்பத்தினர்..! என்ன நடந்தது..?

நடிகர் விஜயகாந்தின் திடீர் மறைவு, யாரும் எதிர்பாராத ஒரு சோகமான சம்பவமாக நடந்தது. கடந்த 8 ஆண்டுகளாக உடல்நல பாதிப்புகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அவரது திடீர் மறைவு சினிமாத்துறையினரை மட்டுமின்றி, தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றவர்கள் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பல லட்சக்கணக்கான மக்கள், அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் சென்னையில் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்துக்குச் சென்று, தங்களது அஞ்சலியை இன்னும் செலுத்திக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜீத்குமார் துபாயில் இருந்ததால் விஜயகாந்தின் மறைவுக்கு நேரில் வரவில்லை என்று துவக்கத்தில் ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அவர் ஒரு இரங்கல் அறிக்கையில் வருத்தம் தெரிவித்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுந்தது.

இதற்கிடையே பிரமேலதாவை போனில் அழைத்து துக்கம் விசாரித்ததாகவும், பிரமேலதாவிடம் ஆறுதல் கூறியதாகவும் ஒரு தகவலை பரவ விட்டனர். கடைசியில் அது உண்மையில்லை. வதந்தி. விஜய் நேரில் வந்தது குறித்து பலரும் சிலாகித்து பேசுவதால் அஜீத்குமாருக்கு ஆதரவாக சிலர் பரப்பிய பொய் செய்தி என்பதும் உறுதியானது.

இந்நிலையில் துபாயில் இருந்து சென்னை திரும்பியுள்ள அஜீத்குமார், நள்ளிரவு 3 மணிக்கு விஜயகாந்த் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருவதாகவும், அந்த நேரத்தில் வந்தால்தான் ரசிகர்கள் தொந்தரவு இருக்காது என்றும் விஜயகாந்த் வீட்டுக்கு போன் செய்து அப்பாயின்ட்மென்ட் கேட்டுள்ளனர்.

ரகசியமாகவும், திருட்டுத்தனமாகவும் நள்ளிரவு 3 மணிக்கு துக்கம் விசாரிக்க அஜீத் வர வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இது கேப்டன் வீடு என்ற நிலையில் கோபப்பட்ட கேப்டன் குடும்பத்தினர், வேகமாக போனை கட் செய்துள்ளனர்.

லட்சக்கணக்கான ரசிகர்கள் அஜீத் படத்தை பார்த்ததால்தான், கோடிக்ணக்கில் சம்பளம் வாங்கி இவர் ராஜ போக வாழ்க்கை வாழ்கிறார். அந்த ரசிகர்களையே மதிக்க தெரியாத இவரது படங்களை பார்க்க சென்றால் அது அந்த ரசிகர்களுக்குதான் அசிங்கம் என்று பலரும் அஜீத்தை திட்டி வருகின்றனர்.