ராம் சரணுக்கு வில்லனாக நடிக்கும் அஜித் குமார் ! தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் வெளியாகிய துணிவு திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவர் தற்பொழுது மகிழ்திருமேனி இயக்கத்தில் AK62 தற்காலிக தலைப்பில் அழைக்கப்படும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில்தான் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது . இது தற்பொழுது ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை  வைத்து ஆர்சி  15 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெயர் மார்ச் மாதம் 27 தேதி வெளியிடுகிறது

இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை நடித்து வருகிறார். ஆனால் படத்தின் வில்லன் யார் என்பது தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் ராம் சரணுக்கு வில்லனாக அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சங்கர் அஜித்துடன் இது பற்றி பேசியதாகவும் அஜித் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது .

அஜித்தின் ஆரம்ப காலகட்டத்தில் அவர் பல நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தார். இது ரசிகர்கள் பெருமளவு பாராட்டப்பட்டது. அதற்குப் பிறகும் மங்காத்தா போன்ற பெரும் ஹிட்டடித்த படங்களையும் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

தற்பொழுது பேன் இந்தியா படமாக உருவாகிவரும் இதில் அஜித் குமார் வில்லனாக நடித்தாள் பெரும் வரவேற்ப்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்தின் ஒரு வித்தியாசமான லுக் ட்ரெண்டாகி வந்தது.

ரசிகர்கள் இது புதிய படத்திற்காக அஜித் வைத்திருக்கும் எனவே எண்ணினார்கள். ஆனால் தற்பொழுது இது ஆர் சி 15 வில்லன்கள் தோற்றமா என பேசி வருகிறார்கள்.

இயக்குனர் சங்கர் ஒரே நேரத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன்2 மற்றும் ராம்சரனின் படங்களையும் இயக்கி வருகிறார். ராம்சரன் தற்பொழுது ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருக்கிறார் ராம்சரன் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த படம் ஆர் ஆர் ஆர்.

இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கியிருந்தார் இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் வரும் நாட்டு நாட்டுப்பாடல் தற்பொழுது ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட உள்ளது ஆகவே ஆஸ்கர் விருதில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version