“வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ பேச்சுக்கு” – அஜித்தின் மேலாளர் பதிலடி ட்வீட்..!

வாரிசு : தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களின் வருகையில் இருப்பவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருக்குமே தமிழகத்தில் சம எண்ணிக்கையில் ரசிகர்கள் இருக்கக்கூடிய நிலையில் இருவரில் யார் பெரியவர் என்ற சர்ச்சையை மூட்டி இருக்கிறார் வாரிசு பட தயாரிப்பாளரான தில் ராஜூ.

இவர் தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் மூலம் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தை பிரம்மாண்ட முறையில் தயாரித்திருக்கிறார். மேலும் கார்த்தியின் தோழா, மகேஷ்பாபுவின் மகரிஷி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

அதுபோலத்தான் ஹச் வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் துணிவு திரைப்படமும் வெற்றிகரமாக படபிடிப்புகளை முடித்துவிட்ட நிலையில் திரைக்கு வருவதற்காக படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு படங்களுமே வரும் பொங்கல் 2023 க்கு ரசிகர்களுக்கு விருந்தாக உள்ள நிலையில் இரண்டு படத்தில் இருந்து பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தில் ராஜூ பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் ஸ்டார் என தெரிவித்திருப்பது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது மட்டுமல்லாமல் டோலிவுட் மீடியாவுக்கு இவர் அளித்த பேட்டியின் மூலம் இந்த சர்ச்சை தான் பேசும் பொருளாக மாறிவிட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் மாபெரும் சண்டையை போட்டு வருகிறார்கள்.

மேலும் தயாரிப்பாளர் அளித்த அந்த பேட்டியில் வாரிசு படத்திற்கு அதிகளவு தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் ஏனென்றால் இது தமிழகத்தில் இருக்கக்கூடிய நம்பர் ஒன் ஹீரோவின் படம் அதுமட்டுமல்லாமல், இது சரியான பிசினஸ் எனவே இதுகுறித்து உதயநிதி இடம் நேரடியாக பேசப்போகிறேன் என்று கூறியிருப்பது தான் அந்த சர்ச்சை மிகு பேச்சாகும்.

ஏற்கனவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் யார் நம்பர் ஒன் நடிகர் என்ற போட்டி நிலவிவரும் இந்த வேளையில் தெலுங்கு திரைவுலகை சார்ந்த தயாரிப்பாளர் இவ்வாறு பேசியிருப்பது சரியில்லை என்றும் அஜித் தான் நம்பர் ஒன் என அஜித் ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல் மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள்.

எரிகின்ற எண்ணெயில் நெருப்பை ஊற்றுவது போல ப்ளூ சட்டை மாறன் விஜய் தான் நம்பர் ஒன் என்றால் அப்ப ரஜினிகாந்த், அஜித், கமலுக்கு எத்தனாவது இடத்தில் இருக்காங்க என்ற கேள்வியை கேட்டு அவர் பங்குக்கு கொளுத்தி விட்டிருக்கிறார்.

இதனை அடுத்து இரண்டு ரசிகர்களும் அவர்கள் பங்குக்கு யார் பெரியவர் என்ற களத்தில் இறங்கி இருக்கக்கூடிய இந்த வேளையில் அஜித் தான் நம்பர் ஒன் என்று அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் ரசிகர்களும் அங்க என்னப்பா சத்தம் என்று கேட்டு தற்போது சண்டையை பெரிதாக்கி விட்டார்கள்.பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை வைத்து நம்பர் ஒன்றை தேர்வு செய்வதா..? அல்லது நடிப்புத் திறனை வைத்து நம்பர் ஒன்றை தேர்வு செய்ய வேண்டுமா..? இல்லை நடன திறமையை கொண்டு யார் நம்பர் 1 என்று தேர்வு செய்ய வேண்டுமா..? என்ற விவாதங்கள் தற்போது அவர்களுக்கு மத்தியில் போய்க் கொண்டு இருக்கிறது.

மேலும் தயாரிப்பாளரான தில்ராஜுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வண்ணம் அஜித்தின் மேலாளர் டிவீட் செய்து இருப்பதை பார்த்து அஜித் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …