TVS 50-யில லடாக் வந்திருக்கேன்.. அஜித்தை பாக்க முடியுமா..? – இளைஞருக்கு AK கொடுத்த ஷாக்..!

சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக ஆக இருக்கும் ஒரு சுற்றுலாத்தலம் லடாக். வாழ்வில் ஒரு நாளாவது லடாக்கிற்கு சென்று விடவேண்டும் என்று இன்றைய இளைஞர்கள் பலரும் தங்களுக்குள் ஆசையை கொண்டு இருக்கிறார்கள்.

அதிலும் முக்கியமாக பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் கொண்ட இளசுகள் லடாக் வரை பைக்கிலேயே செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்தவகையில் திருவாரூர் மாவட்ட சேர்ந்த இளைஞரான பாலா என்பவர் TVS50 வண்டியில் லடாக் வரை பயணம் செய்திருக்கிறார்.

நடிகர் அஜித்குமார் கடந்த சில நாட்களாக லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். தன்னுடைய விலை உயர்ந்த பைக்கில் லடாக்கில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பைக்கிலேயே சென்று விசிட் செய்து வருகிறார். மேலும் அங்கேயே வந்திருக்கக்கூடிய இளைஞர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு தன்னுடைய நாட்களை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார்.

நடிகர் அஜித்குமார் லடாக்கில் இருப்பதை தெரிந்து கொண்ட இளைஞர் பாலா நடிகர் அஜித்குமாரின் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரு நபரின் நபரிடம் நானும் லடாக்கில் தான் இருக்கிறேன் TVS 50-யில் வந்து இருக்கிறேன். அஜித் அண்ணாவைப் பார்க்க முடியுமா..? என்று கமெண்ட் செய்திருக்கிறார்.

இவருடைய ஆசையை புரிந்து கொண்ட அந்த நபர் அவரை அழைத்து நடிகர் அஜித் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே இளைஞர் பாலா அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொதுவாக நடிகர் அஜித்தை பொது இடங்களில் பார்ப்பது என்பது அரிதான விஷயம். ஆனால், இங்கிருந்து லடாக் எடுத்துச் சென்று நடிகர் அஜித்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் இளைஞர் பாலா.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகைகளை குவித்து வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் திருவாரூரிலிருந்து TVS 50 பைக்கில் சென்றது மிகப்பெரிய சாதனை.

அங்கு நடிகர் அஜித்குமார் இவரை சந்திப்பு சில நேரம் சில மணி நேரங்கள் அவருடன் அவருடைய பயணம் குறித்து கேட்டறிந்து இருக்கிறார். இது அஜித் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது அந்த இளைஞருக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version