“செம காமினேஷன் மாமா..!” குருபெயர்ச்சியோட அட்சய திருதியை ஒன்றாக வருது..!

போடுடா வெடியே என்று கூறக்கூடிய அளவுக்கு இந்த வருடம் அட்சய திருதியை, குரு பெயர்ச்சியும் இணைந்து வருவதால் பலருக்கும் பலவிதமான நன்மைகள் ஏற்பட போவதாக ஜோதிட வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

பொதுவாக இந்த அட்சய திருதியில் தங்கம் வாங்க முடியாதவர்கள், உப்பை வாங்கி வீட்டில் செல்வ செழிப்பை அதிகரித்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட இந்த அட்சய திருதியை பற்றி விரிவாக பார்க்கலாம்.

akshaya-tritiya

அட்சய திருதி என்பது அமாவாசைக்கு மூன்றாவது நாள், சித்தரை மாதத்தில் ஏற்படும் திருதி திதியை தான் நாம் அட்சய திருதி என்று அழைப்பதோடு மட்டுமல்லாமல் கொண்டாடியும் வருகிறோம். இது அமாவாசைக்கு மூன்றாவது நாள் என்பதால் மூன்றாம் எண்ணுக்குரிய அதிபதியாக குருபகவான் விளங்குகிறார். இவருக்கு உரிய உலோகமாக தங்கம் விளங்குவதால் தான் முன்னோர்கள் இந்த தினத்தில் தங்கம் வாங்குவது சிறப்பானது என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அட்சய திருதி ஏற்படுகிறது. இதே நாளில் குரு பெயர்ச்சியும் நடப்பதால் அமோகமான பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

akshaya-tritiya

எனவே இந்த அச்சய திருதியில் நீங்கள் செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமிக்கு மல்லிகை பூ போட்டு, கனகதாரா ஸ்தோத்திரத்தை மனதார ஜெபித்தால் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டுக்கு நிச்சயம் வருவாள். அதுமட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருள் கிடைக்க பிரம்ம  முகூர்த்தத்தில் நீங்கள் குபேர பூஜை செய்யலாம்.

மேலும் இந்தத் திருநாளில் நீங்கள் கங்கையில் குளிப்பது கூடுதல் விசேஷமாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த தினத்தில் நீங்கள் விரதம் இருப்பது மிகச்சிறந்தது.

akshaya-tritiya

எனவே இந்த திருநாளில் உங்களால் தங்கம் வாங்க முடியவில்லை என்று கவலை இருந்தால் நீங்கள் அதைப் பற்றி கவலைப்படாமல், அன்றைய தினம் விரதம் இருந்து உப்பு, மஞ்சள், பச்சரிசி, நெய் போன்ற பொருட்களை வாங்குவதின் மூலம் உங்கள் வீட்டில் வற்றாத செல்வம் ஏற்படும்.

எனவே நீங்களும் மறவாமல் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி உங்கள் பூஜை அறையில் கட்டாயம் மகாலட்சுமியை வைத்து வழிபட்டு எண்ணற்ற நன்மைகளை பெறுவதோடு வீட்டின் செல்வ செழிப்பையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version