உச்சத்தில் இருந்த நடிகைகள் அசின்-அமலா பால்…. இப்போ இதை தேடி அலைகிறார்கள்..!

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்த நடிகைகள் அசின் மற்றும் அமலா பால்.

இவர்கள் இருவருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழில் இருவரும் அறிமுகமாவதற்கு முன்பே மலையாள மற்றும் தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி சில வெற்றி படங்களையும் தந்துள்ளனர்.

வெற்றி படங்கள் மூலமாக மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலைகள் தங்களுக்கு என தனி இடத்தை பிடித்தவர்கள்.தெலுங்கில் ரவிதேஜா, ராம்சரண், நாகர்ஜுனா போன்ற முன்னணி பிரபலங்களுடன் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நடிகை அசின் தமிழில் அறிமுகமான திரைப்படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த கஜினி, வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் ஆகிய திரைப்படங்கள் அவரை முன்னணி நடிகன் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியது.

தமிழில் நல்ல வரவேற்பு இருக்கும்போதே இந்தி திரைப்பட வாய்ப்பு கிடைத்ததற்காக தமிழ் திரைப்படங்களுக்கு முழுக்கு போட்டு முழு நேரமும் இந்தி திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால் அங்கு அவரால் தொடர்ந்து வெற்றி படங்களை தர முடியவில்லை மீண்டும் தமிழிலும் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் நடிகை அமலா பால் தான் அறிமுகமான சிந்து சமவெளி என்னும் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.அதைத்தொடர்ந்த அவர் நடித்த மைனா திரைப்படத்தில் அவரது சிறந்த நடிப்புக்காக மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

இவரும் அசின் போலவே பிறமொழிப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டியதால், தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்தது.

நடிகை அசின் தற்போது திருமண வாழ்வில் சந்தோஷமாக இருந்து வருவதாகவும் வாய்ப்புகள் சரியாக அமையும் போது மீண்டும் நடிக்க விரும்புவதாகும் தெரிவித்துள்ளார்.

நடிகை அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் குறுகிய காலத்திலே இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது.

தற்போது பட வாய்ப்புகளுக்காக தனது கவர்ச்சியான போட்டோக்களை தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இதனால் ரசிகர்கள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் இப்படித்தான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version