பொட்டு துணி இல்லாமல் வீடியோ காலில் பெண்ணுடன் நாடாளுமன்ற உறுப்பினர் – தலையில் அடித்துக்கொள்ளும் பொதுமக்கள்..!

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இளம்பெண்ணுடன் வீடியோ காலில் பேசியவாறு அந்தப் பெண்ணுக்கு காட்ட கூடாத இடங்களை காட்டி பேசியுள்ள வீடியோ காலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி-யான இவர் இந்த விஷயத்தை செய்துள்ளது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

டுவிட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எங்கோ ஏதோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயம் கூட பொதுமக்களின் பார்வைக்கு வந்து விடுகின்றது.

இன்னும் சொல்லப்போனால் சமூக வலைதளங்கள் இல்லை என்றால் பல விஷயங்களை இன்று உள்ள மீடியாக்கள் இருட்டடிப்பு செய்து இருக்கும் என்ற உண்மையை நாள்தோறும் நம்மால் உணர முடிகிறது.

ஏனென்றால் சமூக வலைதளங்களில் வெளியாகக் கூடிய உண்மையான சில விஷயங்களை செய்தி தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் எழுதவோ அல்லது காட்டவோ மறுக்கின்றன.

காரணம் இன்று பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக அந்த கட்சிக்கு சாதகமாக வெளியாகும் செய்திகளை மட்டுமே ஒளிபரப்பியும், பிரிண்ட் செய்தும் வருகின்றன. இது ஒட்டுமொத்த நாட்டையே அழிவு பாதைக்கு எடுத்துச் செல்லும் ஒரு போக்கு என்றால் அது மிகைப்படுத்துதல் என்று ஆகாது.

இன்றைய தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை மீடியாக்களை பொதுமக்கள் எந்த அளவுக்கு யோசிகிறார்கள்.. எந்த அளவுக்கு நம்புகிறார்கள்.. என்பதை சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பதிவிடும் கருத்துக்களை பார்த்தாலே புரிந்துவிடும். அந்த அளவுக்கு தான் இருக்கின்றது இன்றைய பத்திரிகைகளில் நிலைமை.

சரி விஷயத்துக்கு வருவோம், ஆந்திர மாநிலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெண் ஒருவரிடம் வீடியோ காலில் காட்ட கூடாத உறுப்புகளை காட்டி வீடியோ கால் பேசியுள்ள வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றது.

ஆந்திராவின் இந்து புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கோரண்ட்லா மாதவ் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு இந்த வீடியோவை அக்கட தேசத்தில் எதிர்க்கட்சிகள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சியினர் என்னுடைய போட்டோவை மார்பிங் செய்து இந்த வீடியோவில் இணைத்து விட்டார்கள் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கோரண்ட்லா மாதவ்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸின் நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து வெளியாகும் வீடியோ இது ஒன்றும் முதல் முறை அல்ல ஏற்கனவே இரண்டு நிர்வாகிகளின் இப்படியான வீடியோக்கள் வெளியாகி அவர்களை கட்சியில் இருந்து நீக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …