நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ், தெலுங்கு ,மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் தற்சமயம் பிரபலமாகும் ஒரு இளம்நநாயகி ஆவார். இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு மக்களிடையே பலத்த ஆதரவு இருக்கிறது.
நடிகை அனிகா சுரேந்திரன் சிறுவயதிலேயே சிறுவயதிலேயே நடிக்கும் ஆர்வம் மிகுந்து காணப்பட்டவர். இவர் 2007 ஆம் ஆண்டு சோட்டா மும்பை எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை அடுத்து four friends, race போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வந்தார். பிறகு 2014 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த கதாபாத்திரத்தில் மிகவும் தனது நடிப்பின் திறமையை கட்சிதமாக வெளிப்படுத்தினார் அனிகா இவருக்கும் அஜித்துக்கும் உண்டான அப்பா மகள் உறவு அனைத்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதை அடுத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. மேலும் நானும் ரவுடிதான், மிருதன் போன்ற அடுத்தடுத்த திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் அனிதா.
இந்த நிலையில் மீண்டும் நடிகர் அஜித் உடன் 2019 ஆம் ஆண்டு ‘விசுவாசம்’ என்னும் திரைப்படத்தில் மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .இதிலும் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்திருந்தார் அனிகா. இதை அடுத்து மாமனிதன் எனும் திரைப்படத்திலும் தெலுங்கு சினிமாவில் ‘கோஸ்ட்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவ்வளவு ஆண்டு காலங்கள் குழந்தையின் நட்சத்திரமாகவே நடித்து வந்த அனிகாவிற்கு முழுநேர நாயகி ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
‘love fully yours veda’ எனும் மலையாள திரைப்படத்தில் முதல் முதலாக முழுநேர நாயகியாக அறிமுகம் ஆனார். படத்தில் நிறைய முத்த காட்சிகளும் படுக்கை அறை காட்சிகளும் அதிகம் காணப்பட்டதால் நிறைய ரசிகர்களிடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளானார். அனிகா இதுவரையில் இப்படிப்பட்ட கதை அம்சங்களில் நடித்ததே இல்லை முதல் படத்திலேயே இப்படியா என்று வாயை பிளக்கும் அளவிற்கு இவரது செயல்கள் இருந்தன.
இந்த நிலையில் நடிகை அணிகா நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.இதனாலேயே நிறைய ரசிகர்களும் இவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். சினிமாவில் கவர்ச்சியின் மூலம் தான் நீண்ட நாட்கள் சினி உலகில் பயணிக்க முடியும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இதனாலேயே நிறைய கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.