ரசிகர்களால் குட்டி நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் நடிகை அனிகா. தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு நானும் ரவுடிதான் விசுவாசம் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் குறும்படங்களிலும் கூட தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து இணைய பக்கங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை சுக்கு சுக்காக உடைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து தன்னுடைய சினிமா வாழ்க்கையின் மீது இருக்கும் குழந்தை நட்சத்திர நடிகை என்ற ஒரு எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் இருந்து எடுத்திருக்கிறார்.
நான் ஹீரோயின் ஆகும் அளவுக்கு வளர்ந்து விட்டேன் என்று கூறும் விதமாக அவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் இருக்கிறது. அது அவருக்கு ஹீரோயின் வாய்ப்பை பெற்றுக் கொடுத்ததா..? என்று கேட்டால் ஆம் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை.
மலையாளத்தில் வெளியான ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் புதுமுக கதாநாயகன் ஒருவருக்கு ஹீரோயினாக முதன்முறையாக படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.
தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாலும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள். தமிழில் விரைவில் ஹீரோயினாக இவர் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்ற எந்த ஒரு கட்டுப்பாடு இல்லாமல் படத்திற்கு வலு சேர்க்கக்கூடிய துணை கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.
காலமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்பொழுது சுடிதார் சகிதமாக அளவு கொஞ்சம் சில புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் ஆஹா இதைத்தானே எதிர்பார்த்தோம்… வேற லெவல் போஸ்.. என்று கிறங்கி கிடக்கிறார்கள்.