“ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல.. செதுக்கு வச்ச சிலை..” – இணையத்தை திணறடிக்கும் அனு சித்தாரா..!

பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா, நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.மலையாள சினிமாவில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனு சித்தாரா.

இவர் தமிழில் ‘வெறி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் நான்கு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது நான்கு வருடங்களுக்குப் பிறகு நடிகை அனு சித்தாரா ஒரு படத்தில் நடிக்க தமிழுக்கு வந்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘அமீரா என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஹீரோக்களாக நடிக்கின்றனர். மேலும் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சீமானின் உதவியாளர் ரா.சுப்பிரமணியன் இயக்குகிறார்.

இந்தப் படத்தைதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.டைரக்டர்களை ’ஒன்மோர் ஒன்மோர்’கேட்டே டயர்டாக வைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட் என்ற நற்பெயருடன் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை அனு சித்தாரா.

சீமானின் தயாரிப்பு நிறுவனமான தம்பி திரைக்களம் தயாரிக்கும் அமீரா’படத்துக்காக கேரளாவிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கும் இவருக்கு, தமிழ் சினிமாவின் அடுத்த நம்பர் ஒன் நடிகை இவர்தான் என்று சர்டிபிகேட் தருகிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர்.

சீமானிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரா.சுப்ரமணியன் இயக்கும் இப்படத்திற்கு ‘டூலெட்’ படம் மூலம் பல விருதுகளை கைப்பற்றிய செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு ‘அமீரா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். படம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே முடிந்துவிட்டதால் மிகவும் உற்சாகமாகிவிட்டாராம்.

இதற்கு முதல் காரணம் படத்தின் நாயகி அனு சித்தாரா தான், என்று பெருமையோடு சொல்கிறார் இணைத் தயாரிப்பாளர் வெற்றிகுமரன்.

இந்நிலையில், அழகிய சிலை அனு சித்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன பொண்ணுடா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று உருகி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version