சர்ச்சையில் சிக்கிய அரவிந்த்சாமி…. படத்தை ஓடிடியில் திரையிட தடை…!

1991ல் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கிய தளபதி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார் அரவிந்த்சாமி  . இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தம்பியாக, கலெக்டர் ரோலில் இவர் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழில் ரோஜா, பம்பாய், மின்சார கனவு தனி ஒருவன், செக்கச் சிவந்த வானம், கடல், வானம், தலைவி போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.இவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் சிறந்த படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் தான் அதிகம் என்றே கூறலாம். இவர் அறிமுகமான காலங்களில் பெண்கள் அரவிந்த்சாமி போன்ற ஆல் தான் தன் கணவனாக வரவேண்டும் இன்னும் அளவிற்கு பெண் ரசிகைகள் இவரை விரும்பினார்கள்.

தற்போது அவர் நடித்து தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான ரெண்டகம் திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. திரைப்படத்தின் கதை தனது என்றும் தனது கதையை திருடிய இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள் என்று நீதிமன்றத்தில் கிஷோர் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஃபெலினி இயக்கத்தில் அரவிந்த் சாமி, குஞ்சக்கோ போகன் மற்றும் ஈஷா ரெப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் செப்டம்பர் 8-ல் மலையாளத்திலும் செப்டம்பர் 23 தமிழிலும் வெளியாகியது. எதிர்பார்த்து அளவிற்கு இத்திரைப்படம் ஓடவில்லை சொல்லப்போனால் இப்படி ஒரு திரைப்படம் வெளியானது என்பது கூட அதிகம் வெளிவரவில்லை.

எனவே திரைப்பட குழுவினர் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபடும் பொழுது திரைப்படம் எனது கதையால் உருவானது என்று வழக்கு தொடர்ந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளக்கே விசாரித்த நீதிபதிகள் திரைப்படத்தை ஓடிடியில் திரையிட இடைக்கால தடையை விதித்துள்ளனர்.

மேலும் திரைப்படக் குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் தலா 10 லட்சம் விகிதம் டெபாசிட் தொகையாக நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.இவ் வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை விரைவில் தொடங்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …