“சித்திரை மாதம் என்றால் அதற்கு ..!” – எவ்வளவு சிறப்புகளா?

சித்திரை மாதம் :தமிழர்களைப் பொறுத்தவரை சித்தரை தொடக்கமே வருடத்தின் முதல் மாதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக சித்தர்கள் எழுதியுள்ள ஜோதிட குறிப்புக்களை நாம் எடுத்துப் பேசலாம் .இந்த ஜோதிட குறிப்புகளில் நாள், நட்சத்திரம், மாத பெயர்கள் போன்றவற்றை மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

chithirai month

அந்தக் குறிப்புகளில் தான் சித்திரை மாதம் ஆண்டு தொடக்கத்தின் முதல் மாதம் என்றும் பங்குனியை கடைசி மாதமாக சொல்லி இருக்கிறார்கள். மேலும் சித்தர்களின் தலைசிறந்த சித்தராகக் கருதப்பட்ட இடைக்காட்டுச் சித்தர் மாத பலன்களையும் வருட பலன்களையும் எழுதி வைத்திருக்கிறார். அதிலும் சித்தரையை தான் வருடத்தின் முதல் மாதமாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சித்திரை மாதத்தில் வருகின்ற சித்ரா பௌர்ணமி மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷ நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து தெய்வத்தை வழிபட்டால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சித்திரை திருவிழா என்றதுமே உங்களுக்கு நினைவுக்கு வர வேண்டியது மதுரை மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழா தான். 12 நாட்கள் நடக்கக்கூடிய எந்த திருவிழாவை யாரும் எளிதில் மறக்க முடியாது.

chithirai month

சித்திரை மாதத்தில் வருகின்ற அட்சய திருதியை தர்மங்கள் செய்ய உகந்த நாளாக முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த நாளில் தங்கம் வாங்குவதோடு மட்டுமல்லாமல், அரிசி, கோதுமை, தானியங்கள், பழங்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் மன அமைதியும், செல்வமும் கிடைக்கும்.

அதுபோலவே சித்திரை மாதம் வருகின்ற அமாவாசையும் மிகச் சிறப்பான அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை தினத்தன்று நமது பிதுர்க்களுக்கு உணவைப் படைத்து வழிபடுவதின் மூலம் பிதுர் சாபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரமானது, நடராஜப் பெருமாளுக்கு சிறப்பு வாய்ந்த தினமாக உள்ளது. இந்த தினத்தில் அபிஷேக அலங்காரங்கள் நடப்பது வழக்கமான ஒன்றாகும்.

chithirai month

மேலும் சித்திரை மாதத்தை தெய்வீக மாதம் என்று பலரும் அழைக்கிறார்கள். இதற்கு காரணம் சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக புராணங்கள் கூறி வருகிறது. மேலும் சித்திரை மாத திருதியை திதியன்று மகாவிஷ்ணு மீனாக அவதாரம் அதாவது மச்சாவதாரம் எடுத்திருக்கிறார்.

எனவே தான் சித்தரை மாதம் பிறப்பதற்கு முதல் நாள் இரவு வீட்டின் நிலை கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம், காசு, நகை போன்றவற்றை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வைத்து மறுநாள் காலை எழும்போது அதில் கண் விழிப்பார்கள்.

 காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நிகழ்வு சித்திரை மாதத்தை வரவேற்பதோடு மட்டுமல்லாமல் நம் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தருவதற்கும் உருவாக்கப்பட்டது.