பெருமானின் அருள் பார்வைபடும் மாதம் புரட்டாசி.. இதில் இந்த மாதத்தில் எந்த ராசி ஏற்றத்தில்? மாதராசி பலன்..

நவகிரகங்களில் தலைமை கிரகமாக இருக்கக்கூடிய சூரிய பகவான் சிம்மத்தில் இருந்து கண்ணுக்கு பெயற்சியாகி சஞ்சரிக்க கூடிய சூழ்நிலையில் இந்த மாதத்தில் சூரியன் மற்றும் பிற கிரகங்களின் மாற்றம் உள்ளிட்ட விஷயங்களால் 12 ராசிகளில் எந்த ராசி ஏற்றம் பெறும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். இதனை அடுத்து சூரியன் புதனோடு சேர்ந்து புத ஆதித்ய யோகத்தை தர இருக்கிறார். மேலும் மற்ற கிரகங்கள் 12 ராசி மீது எத்தகைய தாக்கம் ஏற்படுகிறது. இதனால் என்னென்ன பலன்கள் உருவாகும் என்பதை பார்க்கலாமா?.

மேஷ ராசி

மேஷ ராசியை சேர்ந்த நீங்கள் அலுவலக வேலைகளில் கூடுதல் கவனத்தை செலுத்துவதோடு ஆரோக்கியத்திலும் கவனத்தை செலுத்துவது அவசியமாகிறது. சிலருக்கு தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதோடு பெண்களால் தொல்லை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே மனதில் தேவையில்லாத எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

ரிஷப ராசி

புரட்டாசி மாதத்தில் ரிஷப ராசி நேயர்களுக்கு படைப்பாற்றல் அதிகரித்து திறமைகள் வெளிவரும். நீங்கள் தீட்டும் திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்த வெற்றிகள் உங்களை வந்து சேரும்.வியாபார வெற்றிகள் மூலம் நிதி ஆதாயம் அதிகரிக்கும் நீங்கள் நினைத்தது நடக்கும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசி நேயர்கள் இந்த மாதத்தில் கட்டாயம் குடும்ப விவகாரத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை செலுத்துவது அவசியம். மேலும் உங்கள் மகிழ்ச்சி வெற்றி இரட்டிப்படைய கூடிய மாதமாக இந்த மாதம் விளங்கும். தங்க ஆபரணங்கள் வாங்கக்கூடிய அதிர்ஷ்டம் உண்டு. எதிரிகளால் துன்பம் ஏற்படுவதோடு வியாதிகள் வர வாய்ப்புகள் உள்ளதால் கூடுதல் கவனம் தேவை.

கடக ராசி

கடக ராசி அன்பர்களை பொறுத்தவரை இந்த மாதத்தில் பயணங்கள் ஏற்படும். புதிய தொடர்புகள் கிடைத்தாலும் கவனத்தோடு அவற்றை கையாள வேண்டும். பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். பெற்ற பிள்ளைகளோடு கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது. சிலர் முன்னிலையில் உங்கள் மரியாதை குறைய வாய்ப்புகள் உள்ளதோடு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

சிம்ம ராசி

சிம்மராசி நேயர்களே உங்கள் பணத்தை பட்ஜெட் போட்டு செலவு செய்யவும். உடல்நிலை சீராக இருப்பதால் சுவையான உணவுகளை உட்கொள்வதில் உங்களுக்கு நாட்டம் ஏற்படும். நண்பர்களின் உதவியை பெறுவதோடு சிலருக்கு தூக்கம் இன்மை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாதத்தில் வருமானம் சற்று கூடுதலாக அமையலாம்.

கன்னி ராசி

கன்னி ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதால் தனிப்பட்ட வளர்ச்சிகள் கவனத்தை செலுத்துவது அவசியமாகும். சிலருக்கு தலைவலி கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மரியாதைக்கு எங்கும் குறைச்சல் இல்லை.

துலாம் ராசி

சுய சிந்தனையோடு செயல்படுகின்ற துலாம் ராசி நேயர்களே இந்த மாதம் உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் இருப்பதால் மன உளைச்சல் கோபம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்களை தள்ளி போடுவது சிறப்பாக இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் நல்ல பொருட்கள் திருட்டுப் போக வாய்ப்புகள் உள்ளது. எனினும் வியாபாரத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி நேயர்கள் தேவையற்ற பயணங்கள் செல்லுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் செய்யும் இடத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட அதிகளவு வாய்ப்புகள் உள்ளதால் அமைதி காப்பது நல்லது. மன உளைச்சலால் உங்கள் முயற்சிகள் தடைப்படும். பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அமைதி இருக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசி நேயர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் தேவை. புதிய திட்டங்கள் பணம் சம்பந்தமான வேலைகளில் கவனம் அவசியம் உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. உடல்நிலை பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். ரத்தம் தொடர்பான உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் எனவே கவனம் தேவை.

மகர ராசி

புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள தயங்காத மகர ராசி நேயர்கள் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனத்தை செலுத்துவது அவசியம். உங்கள் அறிவையும் திறமையும் விரிவுபடுத்திக் கொள்ளுங்கள். திருமணமாகாதவர்க்கு திருமணம் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள் மகிழ்ச்சியை அதிகரித்து பகைவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். உற்சாகமும், தைரியமும் இந்த மாதத்தில் அதிகளவு இருக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசி நேயர்கள் நிதி விஷயங்களில் கவனத்தை செலுத்துவதோடு பணத்தை பாதுகாக்க முதலீடுகள் செய்வது அவசியமாகும். அப்படி முதலீடு செய்தால் அதில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். புதிய நண்பர்களின் தொடர்பு நன்மை கொடுக்கும் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் சில சமயம் நடக்காமல் போகலாம்.

மீன ராசி

மீன ராசி அன்பர்களுக்கு உறவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. கூட்டாளிகளின் உதவி இருந்தாலும் சலசலப்புகள் ஏற்படும் தேவையற்ற மன உளைச்சல் உருவாகும். ஆடை ஆபரண சேர்க்கை இருந்தாலும் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக அதிகம் சிந்திப்பீர்கள். அஜீரண கோளாறுகள் ஏற்படுவதோடு முதலீடுகள் மூலம் லாபத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam