“சனிக்கிழமைகளில் அசைவம் வேண்டாம்..!” – விரதம் இருங்க..!

சனிக்கிழமைகளில் அசைவம் வேண்டாம்:சனிக்கிழமை சனி பகவானுக்கு உரியது என்பது எல்லோருக்குமே நன்றாக தெரியும். ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கக்கூடிய சக்தி சனிபகவானுக்கு உள்ளது. இந்த சனிபகவான், விஷ்ணு பகவானின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்.

மேலும் சனி பகவானின் அதிபதியாக மகாவிஷ்ணு விளங்குவதால் சனிக்கிழமை பெருமாளுக்கு ஏற்ற நாள் எனக் கூறலாம். இந்த சனிக்கிழமை நீங்கள் விரதம் இருக்கலாம்.

saturday

அப்படி நீங்கள் விரதம் இருக்க நினைக்கிறீர்கள் என்றால் அன்றைய தினம் அதிகாலை எழுந்து சுத்தமாக தலைக்கு குளித்து பெருமாளை நினைத்து ராமகட்டியின் உதவியால் சிறிதாக உங்கள் நெற்றியில் நாமத்தை போட்டுக் கொண்டு பெருமாளுக்கு உகந்த மந்திரங்களை சொல்லுவது மிகவும் நல்லது.

மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் நீங்கள் பகலில் பழ சாறு, நீர் மட்டும் குடிக்க வேண்டும். சனி பகவானையும், விஷ்ணுவையும் மனதார நீங்கள் மனம் உருகி வேண்டிக் கொண்டால் நிச்சயம் அனைத்தும் நடக்கும்.

 அன்று நீங்கள் உங்கள் வீட்டு பூஜை அறையை நன்கு சுத்தம் செய்துவிட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி திருமாலை வணங்க வேண்டும். பிறகு இரவு நேரத்தில் விரதத்தை முடிவு செய்துவிட்டு சாப்பிடலாம்.

saturday

சனிக்கிழமை விரதம் இருப்பதால் எண்ணற்ற நன்மைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கும் கிடைக்கும். மேலும் சனி பகவானின் பார்வை சற்று தணிந்து உங்களுக்கு வேண்டிய பலன்களை அள்ளித் தருவார்.

சனிக்கிழமை விரதம் இருப்பதின் மூலம் உங்களுக்கு தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும. மேலும் இழுபறியாக இருக்கும் நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வந்து சேரும். அரசியல் தொடர்பான காரியங்களிலும் வெற்றி பெற்றோம்.

எனவே சனிக்கிழமை உங்கள் வீடுகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் அசைவ உணவை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. சனிக்கிழமையின் மகிமையை உணர்ந்து நீங்கள் முறையாக இருந்து முறையாக விரதம் இருந்தால் முழு பலனையும் பெற முடியும்.

saturday

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் இதுபோல விரதம் இருந்து நீங்கள் திருமாலை வணங்கி வர உங்கள் வாழ்க்கையில் நினைத்தது அத்தனையும் நிறைவேறும்.

நீங்களும் முறையாக இந்த விரதத்தை இருந்து பார்த்தால் கட்டாயம் உங்கள் வீட்டுக்கு அச்ச ஐஸ்வர்யம் சேருவதோடு தொட்டது அனைத்தும் துலங்கும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.