Right-ல விஜய்.. Left-ல ஷாருக்கான்.. நடுவுல அட்லி..! – என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

 

 ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனர் அட்லிக்கு என்று தமிழ் திரையுலகில் தனித்துவமான ஒரு இடம் கிடைத்தது. இந்தப் படத்தில் ஆர்யா மற்றும் நயன்தாரா மிகச் சிறப்பான முறையில் நடித்திருந்ததால் இவர்களுக்கும் நல்ல பெயர் கிடைத்ததோடு  இந்தப் படமானது மணிரத்தினத்தின் மூலம் வெளிவந்த மௌன ராகத்தின் சாயலில் உள்ளது என்ற முத்திரை குத்தப்பட்டது.

 தொடர்ந்து இவர் விஜயுடன் இணைந்து தெறி படத்தை தயாரித்து ரசிகர்கள் முன் தெறிக்க விட்டார். இதுவும் வசூலில் சாதனை புரிய மேலும் மெர்சல், பிகில் என இரண்டு படங்கள் விஜயோடு இணைந்து வழங்கினார்.  அட்லி இயக்கிய இந்தப் படங்கள் அனைத்தும் காப்பி அடிக்கப்பட்ட சில கேரக்டர்கள் கதைகளை மாற்றி கொடுத்திருப்பதாக சினிமா இண்டஸ்ட்ரியில் பேச்சு வந்தது. எனினும் அனைத்து படங்களும் வசூல் வந்ததால் அந்த பேச்சை அப்படியே அமைந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது அட்லி பாலிவுட் நடிகர் ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை படம் பிடித்து வருகிறார். அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிஸியாக சென்னையில் நடந்தது வருகிறது.

 இதனை அடுத்து  இயக்குனர் அட்லி தனது 36வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். எனது பிறந்த நாள் விழாவில் ஷாருக்கான் மற்றும் நடிகர் விஜய் இருவரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள் மேலும் இவரது ரசிகர்கள் திரைத்துறையைச் சார்ந்த ஒருவருக்கு தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 தனது பிறந்த நாளில் விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை கூறியிருக்கிறார். இது என்ன என்றால் இந்த படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், அனிருத் இசையமைக்கிறார் என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்தப் படத்தில் அட்லீயின் ஃபேவரைட்டான விஜய்யும் கேமியோ ரோல் செய்வது கன்ஃபார்ம் ஆகியுள்ளது தான் அந்த இனிப்பான விஷயம்.

தற்போது பிறந்தநாள் சமயத்தில் இவரும் ஷாருக்கானும் விஜய்யும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. மூவரும் கருப்பு உடையில் ஒன்றாக நிற்க தன் வாழ்நாளில் இதை விட வேறு என்ன வேண்டும் என்ற வாசகத்தை வெளியிட்டிருப்பது வலைதளங்களில் வைரலாகப் பரவி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version