தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா..!!

மகளிர் டி20 உலகக் கோப்பை 2023:

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வரலாறு படைத்துள்ளது. பெண்கள் டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா பெண்கள் ஆறாவது முறையாக வென்றுள்ளனர். இறுதிப் போட்டி மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியது, ஆனால் இறுதியில் ஆஸ்திரேலியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் தென்னாப்பிரிக்காவின் உலக சாம்பியன் கனவு மீண்டும் தகர்ந்தது.

 

அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதே நேரத்தில், ஆஸ்திரேலியா அணி இந்தியாவை தோற்கடித்து இறுதி போட்டியை உறுதி செய்தது. தற்போது இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலகை கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது:

ஆஸ்திரேலியாவின் மகளிர் அணி 2010, 2012, 2014, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது ஆறாவது முறையாக இந்த பட்டத்தை ஆஸ்திரேலியா பெண்கள் கைப்பற்றியுள்ளனர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்காக பெத் மூனி 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் மரிசானே கப் 2-2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்காவுக்கு லாரா வோல்வார்ட் மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடினார்.
ஆஸ்திரேலியா அளித்த 156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்காவுக்காக லாரா வோல்வார்ட் 61 ரன்கள் எடுத்தார், ஆனால் அவரால் அணியயை வெற்றிபாதைக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை.இறுதியில் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தது.