“என் அப்பன் அல்லவா” “என் தாயும் அல்லவா” என்ற பாடல் மிக விரைவில் வெளிவரும் பகாசூரன் படக்குழு!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் மோகன்ஜி அவர்கள். இவர் இயக்கும் அனைத்து படங்களும் சர்ச்சைகள் நிரம்பிய படங்களாகவே இருக்கும் அந்த வரிசையில் இவர் இயக்கிய திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின, இருப்பினும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து இவர் தற்போது இயக்கி வரக்கூடிய படத்தின் பெயர்தான் இந்தப் படத்தில் தனுசை திரையுலகத்திற்கு கொடுத்த அவர் அண்ணன்  ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் செல்வராகவன் தான் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் நட்டி என்று அழைக்கப்படக்கூடிய நடராஜ் மற்றும் ராதாரவி ஆகியோர் மிகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்திற்கான இசையை சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.மேலும் இதில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகவும் நல்ல முறையில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இப்போது இந்த படத்துக்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில்  படத்திற்கான பின்னணி பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பகாசுரன் படத்தின்  டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 இந்நிலையில் படத்தில் வரக்கூடிய பாடல் வரிகளான “என்னப்பன் அல்லவா” “என் தாயும் அல்லவா” என்ற பாடல் விரைவில் வெளியாகும் என இதன் இயக்குனர் மோகன் அவர்கள் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பாடலுக்காக மிகச் சிறப்பான முறையில் நடனமாடிய இயக்குனர் செல்வராகவனை நீங்கள் பார்த்தால் அவர் நடிப்பில் அசந்து விடுவீர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடிய செல்வராகவன் எப்படி இருப்பார் என்பதை  காண மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஏற்கனவே பீஸ்ட் படத்தில் தனது திறமையை காட்டி இருந்த செல்வராகவன் இந்தப் படத்திலும் கண்டிப்பாக பின்னி பெடலெடுத்து இருப்பார் அதுமட்டுமல்ல ஆட்டத்திலும் அனைவரையும் கலக்கி விடுவார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …