KGF 2 – டீசரை பார்த்து விட்டு “Beast” இயக்குனர் என்ன சொல்லி இருக்கார் பாருங்க..!

விஜய்யின் பீஸ்ட் ( Beast ) படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாகிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்தே கொண்டாட்டத்தை துவக்கி விட்டனர் ரசிகர்கள். இந்நிலையில் வார விடுமுறை நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் இனிப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது. படத்தின் வெளியீட்டு உரிமம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தை பான் இந்தியன் படமாக வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான போஸ்டர்கள் நேற்று வெளியிடப்பட்டன.

தென்னிந்திய மொழிகளில் பீஸ்ட் என்று இருக்க, இந்தியில் மட்டும் இந்த படத்திற்கு ‘ரா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் படத்தில் விஜய் ரா ஏஜென்ட்டாக நடித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு போட்டியாக வெளியாகும் ‘கேஜிஎப் சாப்டர் 2‘ படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தை பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.பட்த்தின் டிரெய்லர் வெளியாகி மிகப்பெரிய அளிவில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் கேஜிஎப் 2 பட டிரெய்லரை பாராட்டி உள்ளார். டிரெய்லர் குறித்த டிவிட்டில் “இது பிரமாண்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கிறது 🔥🔥 ப்டத்தை பார்க்க காத்திருக்க முடியாது KGF Chapter2 Trailer” என டிவீட் செய்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version