“பொலிவான சருமம் வேண்டுமா? – அப்ப இத செய்யுங்க..!

பார்க்கும்போதே தன்னை யாரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறீர்கள் என்று கூற மாட்டார்களா? என்று ஏங்கித் தவிப்பவர்கள் தங்களுக்கு பொலிவான சருமம் வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற குறிப்புகளை ஃபாலோ செய்வதின் மூலம் உலக அழகியாக விரைவில் மாறிவிட முடியும்.

Glowing Skin

மேலும் உங்களது அழகான தோற்றத்திற்கு, சரும ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த சருமத்தை இயற்கையான முறையில் நீங்கள் பராமரிப்பதன் மூலம் எந்த விதமான பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது.

எனவே எப்படி உங்கள் சருமத்தை மிக நேர்த்தியான முறையில் பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Glowing Skin

உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினசரி நீங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது இது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால் உங்கள் சருமம் எப்போதுமே சிறப்பாக இருக்கும்.

மேலும் தற்போது கோடை காலம் என்பதால் நீங்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது ஒரு வெட் திசு என்று சொல்லக்கூடிய ஈரப்பதமான திசு ஒன்றை கையில் எடுத்துச் செல்லுங்கள். இதனைக் கொண்டு உங்கள் முகம் மற்றும் சருமத்தை அடிக்கடி துடைத்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

Glowing Skin

உங்கள் முகத்திற்கு அழகு சேர்க்கும் ஹெவி பவுண்டேஷன்களை நீங்கள் அதிகம் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை அது சேதப்படுத்தும். எனவே இதைத் தவிர்த்து விடுங்கள்.

உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ரோஸ் வாட்டர் உதவி செய்கிறது. ரோஸ் வாட்டர் ரோடு, எலுமிச்சை சாறு கலந்து நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகளை சரி செய்து விடலாம்.

Glowing Skin

இதற்காக நீங்கள் ரோஸ் வாட்டர் ரோடு சந்தனத்தை குழைத்து உங்கள் முகத்தில் பேஸ் பேக்காக போட்டு விடலாம். மேலும் கைகள் மற்றும் கால் பகுதிகளிலும் இதை தடவி விடுவதின் மூலம் உடலுக்கு குளிர்ச்சி கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் சருமமும் ஆரோக்கியமாக அழகாகும்.

உங்கள் முகத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முல்தானி மெட்டியை நீங்கள் பயன்படுத்தலாம். மேலும் முகப்பருக்கள் வராமல் இருக்க வினிகரோடு நான்கு பங்கு நீர் கலந்து உங்கள் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் சருமத்தின் பிஹெச் அளவு சமமாகி முகப்பரு ஏற்படாது.

Check Also

“அழகுக் கலையில் தேன்..!” – இம்புட்டு குணம் இருக்கா..!

எலுமிச்சை பழத்தை எப்படி தேவ கனி என்று அழைக்கிறோமோ, அதுபோல இயற்கையாக கிடைக்கக்கூடிய அமிர்தமாக தேன் கருதப்படுகிறது. இந்தத் தேனை …