“உங்க பாதத்துல வெடிப்பு இருக்கா..!” No Tension அத நீக்க சூப்பர் டிப்ஸ்..!!

பாதத்துல வெடிப்பு: சரும பராமரிப்பு, முகப் பராமரிப்பு போலவே பாதங்களை பராமரிப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் நமது உடம்பை தாங்குகின்ற மிக முக்கிய சக்தி இந்த பாதங்களுக்குத்தான் உள்ளது. எனவே பாதத்தை நீங்கள் பக்குவமாக பராமரிப்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும்.

பாத பராமரிப்பு செய்யாமல் இருப்பதின் காரணத்தினால்  பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வெடிப்பு ஏற்படுவதற்கு அவர்களது உடல் பருமன், பயன்படுத்தக்கூடிய காலணிகள், வறண்ட சருமம், நீண்ட நேரம் நீரில் இருந்து வேலை செய்தல் போன்றவற்றை நாம் காரணமாக கூறலாம்.

foot crack

எனவே உங்கள் பாதங்களில் இருக்கக்கூடிய பாத வெடிப்புகளை எளிமையான முறையில் சரி செய்யக்கூடிய வழிமுறைகளை இந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பாத வெடிப்புகளை போக்கக்கூடிய டிப்ஸ்

வறண்ட சருமத்திற்கு நல்ல பலனை கொடுக்கக்கூடிய வாழைப்பழத்தை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பாத வெடிப்பை சரி செய்து கொள்ள முடியும்.

 அதுமட்டுமல்லாமல் வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய ஈரப்பதமானது ஒரு மிகச்சிறந்த இயற்கையான மாயசரைசராக திகழ்கிறது.மேலும் இதில் வைட்டமின் ஏ, பி சிக்ஸ் வைட்டமின் சி போன்றவை இருப்பதால் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது.

foot crack

எனவே பழுத்த வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்து கொள்ளுங்கள். இதற்கு காய் வெட்டாக இருக்கக்கூடிய பழங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.

பழுத்த வாழைபழத்தை மசித்து வைத்திருக்கக் கூடிய நீங்கள் அந்த பழத்தை ஒரு பேஸ்ட் போல் மாற்றி உங்கள் கால் பகுதிகளில் நன்கு அப்ளை செய்து விட்டு 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். இந்த பேஸ்ட் வெடிப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் முழுவதும் ஊடுருவிச் செல்லும் படி நீங்கள் தேய்த்து விட வேண்டும்.

foot crack

பிறகு காயும் வரை காத்திருக்கக்கூடிய நீங்கள் கால் காய்ந்த பிறகு இதனை நீங்கள் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி எடுத்துவிடலாம். இதுபோல இரவு தூங்குவதற்கு முன்பு நீங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்வதின் மூலம் உங்கள் பாதத்தில் இருக்கக்கூடிய வெடிப்புகள் குறைந்து நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

நீங்களும் இந்த முறையை பயன்படுத்தி உங்கள் கால்களில் வெடிப்பு இருந்தால் அப்ளை செய்து பாருங்கள். நிச்சய பலன் கிடைக்கும் அப்படி பலன் பெற்றால் எங்களோடு உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam