“சன் ஸ்கிரீன் லோஷன்..!” – பயன்படுத்துவதால் என்ன நன்மை பார்க்கலாமா?

சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது நீங்கள் கண்டிப்பாக உங்கள் தருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோஷன் போட்டு தான் செல்ல வேண்டும். இல்லை என்றால் கோடை காலத்தின் தாக்கத்தினால் உங்கள் சருமத்திற்கு எக்கச்சக்கமான பாதிப்புகள் ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல் சூரிய ஒளியிலிருந்து வெளிப்பட்டு வரும், புற ஊதா கதிர்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள இந்த சன் ஸ்கிரீன் லோஷன் உதவி செய்யும்.

sun screen

 அப்படி சன் கிரீன் லோஷனை பயன்படுத்துவதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை விளக்கமாக பார்க்கலாம்.

சன் ஸ்கிரீன் லோஷனை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் முகச்சுருக்கங்களை முன்கூட்டியே தடை செய்து விட முடியும். அது மட்டுமல்லாமல் சரும எரித்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

sun screen

 சரும புற்றுநோய் அபாயத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த லோஷனுக்கு உள்ளதாலீ இதை நீங்கள் கட்டாயம் தினமும் பயன்படுத்துவதால் தவறு ஏதும் இல்லை.

இந்த லோஷனை பயன்படுத்துவதின் மூலம் சூரிய கதிர்களின் ஒளியானது நேரடியாக நமது சருமத்தில் படுவது தடைபடும். இதன் மூலம் சருமத்தில் ஏற்படும் கருப்பு நிற திட்டுக்கள், மங்கு போன்றவை ஏற்படாமல் உங்கள் சருமம் பளிச் என்று இருக்கும்.

சன் ஸ்கிரீன் லோசன் பயன்பாடு ஆனது சருமத்தில் இருக்கக்கூடிய முக்கிய புரதங்களான கொலாஜன்,கெரட்டின் மற்றும் எலாஸ்டின் போன்றவற்றை வெளியே சென்று விடாமல் பாதுகாக்க உதவி செய்கிறது. மேலும் இது புற ஊதாக் கதிர்களில் இருந்து ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காக்க உதவி செய்கிறது.

sun screen

எனவே இந்த வெயில் காலத்தில் நீங்கள் வெளியே செல்லும்போது எஸ் பி எஃப் முப்பது கொண்ட சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்த மறக்காதீர்கள். மேலும் மினரல் சார்ந்த சன் ஸ்கிரீன் லோஷனை தான் அனைத்து விதமான சரும நிபுணர்களும் பரிந்துரை செய்கின்ற பிராண்ட் ஆகும்.

எனவே மேற்கூறிய வழிமுறைகளை நீங்களும் பயன்படுத்தி உங்கள் தருமத்தை இந்த கோடைகாலத்தில் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Check Also

“பொலிவான சருமம் வேண்டுமா? – அப்ப இத செய்யுங்க..!

பார்க்கும்போதே தன்னை யாரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறீர்கள் என்று கூற மாட்டார்களா? என்று ஏங்கித் தவிப்பவர்கள் …