இயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை..? – உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்..?

பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் அவர்களின் மகள் சரண்யா பாக்யராஜ் பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர் அதன்பிறகு என்ன ஆனார்… எங்கே போனார்.. என்ற எந்த விவரமும் தெரியவில்லை.

தற்பொழுது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் இவருடைய நிலை என்ன என்பது தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். கடந்த 1985ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் நடிகை சரண்யா பாக்யராஜ்.

இவர் தன்னுடைய தந்தையை பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருக்கு ஹீரோவாக நடித்தவர் மலையாள நடிகர் பிரித்திவிராஜ். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இன்றளவும் இந்த பாடல்கள் ரசிகர்களின் விருப்பமான பாடலாக இருக்கின்றது. அந்த வகையில் உன்னை கண்டேனே முதல் முறை என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் என்ற பாடல் இன்னமும் இளசுகளின் பேவரைட் பாடலாக இருக்கின்றது.

இந்நிலையில் சரண்யாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர். ஆனால் இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடியவே மனமுடைந்து போயிருக்கிறார் நடிகை சரண்யா.

இதற்காக பலமுறை ஆஸ்திரேலியாவுக்குச் சென்று வந்த இவர் தன்னுடைய காதல் இனிமேலும் வரப்போவதில்லை என்பதை தெரிந்து கொண்டு வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

மேலும் தன் வீட்டில் இருக்கும்போது மூன்று முறைக்கு மேல் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் நடிகை சரண்யா. நல்வாய்ப்பாக அவர் தற்கொலை முயற்சி எடுக்கும் போதெல்லாம் அவருடைய உறவினர்களும் அருகில் இருந்திருக்கின்றனர்.

இதனால் அவரை காப்பாற்ற முடிந்திருக்கிறது. தன் மகளின் இந்த காதல் தோல்வியை வைத்து கதையை எழுதி பாரிஜாதம் என்ற படத்தை இயக்கினார் பாக்கியராஜ். ஆனால், சரண்யா தற்போது ஒரு முடிவு எடுத்து தான் வேலை உண்டு தான் உண்டு என்று அமெரிக்காவில் படித்து வருகிறாராம். மேலும் திருமணமே இனிமேல் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவிலும் இருக்கிறாராம் சரண்யா பாக்யராஜ். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …