பிக்பாஸ் வனிதா-வின் முன்னாள் காதலருக்கு கிடைத்த வாய்ப்பு..! – பஞ்சாயத்து கன்ஃபார்ம்..!

 மிக விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கக்கூடிய பிக்பாஸ் 6 சீசன் பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டது. இந்த சீசனில் யார், யார் பங்கேற்கிறார்கள் அவர்களது பட்டியலும் வெளிவந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த சீசனை விக்ரமின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ளார் என்பது இதில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

கடந்த சீசனில் நடிகை வனிதா வைத்து  நடத்தப்பட்ட சம்பவங்களால்  அந்த சீசன் மிகவும் சூடு பிடித்த தோடு டிஆர்பி எகிறியது. இந்த சூழ்நிலையில் மீண்டும் வனிதாவை  கொண்டு வருவதன் மூலம் டிஆர்பியை அதிகப்படுத்த முடியும் என்று விஜய்டிவி கருதுகிறது.

 அதற்காகத்தான் வனிதாவிற்கு நெருங்கிய  ராபர்ட்டை சீசன் 6 கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள். அவ்வாறு ராபர்ட் சீசன் 6 வரும்போது வனிதா பற்றிய ரகசியமான சில விஷயங்களை போட்டு உடைப்பார் இதன்மூலம் டிஆர்பி கூடுவதோடு மக்கள் பரபரப்பாக பிக்பாஸ் சீசன் 6 அவசியம் பார்ப்பார்கள் தவறவிட மாட்டார்கள் என்பது போன்ற யூகங்களின் அடிப்படையில் அவரை இந்த சீசனுக்கு கொண்டுவருவதற்கான வேலைகளை தொடங்கி விட்டார்கள்.

 அது சரி. இந்த ராபர்ட் யார் என்று உங்களுக்கு தெரியுமா? வனிதா இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட நபர் தான் தெலுங்கானாவை சேர்ந்த ஆனந்த் ராஜ். இவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது வனிதா ஒரு படத்தை  தயாரித்து  அந்தப் படத்தில் அவர் தான் நடன இயக்குனராக இருந்தார். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் வந்தது.

எனினும் இதனை ராபர்ட் ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் இவர் ராபர்ட்டை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் என்ற செய்திகள் பரவியபோது ராபர்ட்ஸ் அதை மறுத்துவிட்டார். இந்த சூழ்நிலையில்தான் தற்போது இவரை களமிறக்க விஜய் டிவி தயாராக வருகிறது 6 சுறுசுறுப்பாக இருக்கும் என்பதால் ரசிகர்களும் இதனைப் பார்ப்பதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.