பிக் பாஸ் 8 அதகளமாய் முடிந்த தொடக்க விழா ஷூட்டிங்!! வீட்டுக்குள் miss ஆன போட்டியாளர்கள்..

இன்று மாலை பிரம்மாண்டமான முறையில் விஜய் டிவியில் பிக் பாஸ் 8 தொடக்க விழா நிகழ்ச்சியானது ஒளிபரப்பாக உள்ளது.இது ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

ரியாலிட்டி ஷோக்களிலேயே மிகவும் முக்கியமான ஷோவாக திகழும் எந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது இதுவரை ஏழு சீசன்கள் முடிந்து விட்ட நிலையில் தற்போது எட்டாவது சீசன் துவங்க உள்ளது.

பிக் பாஸ் 8 அதகளமாய் முடிந்த தொடக்க விழா ஷூட்டிங்..

இந்த 8-வது சீசனில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற வாசகம் உச்சரிக்கப்படுவதோடு இன்று சீசனை உலக நாயகன் கமலஹாசனுக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எக்க சக்கமாக மாறிவிட்டது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 7 பிக் பாஸ் சீசன்களை போல இந்த சீசன் அலுப்பு சலிப்பு இல்லாமல் அலப்பறைகளோடு ரசிகர்களை கவரக்கூடிய வகையில் இருக்குமா? இந்த போட்டியாளர்களை எப்படி விஜய் சேதுபதி எதிர்கொள்வார் என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் விஜய் சேதுபதிக்கு ஏற்கனவே திரை உலகில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருப்பது போல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதின் மூலமும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று பரபரப்பாக வெளிவர இருக்கும் பிக் பாஸ் 8 சீசன் துவக்க விழாவை ஒட்டி அதற்கான ஷூட்டிங் பணி நேற்று துவங்கியது. இதில் விஜய் சேதுபதி புது பிக் பாஸ் வீட்டை சுற்றிக்காட்டும் பகுதி மற்றும் அதைத் தொடர்ந்து போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி உள்ளே அனுப்புவது ஷூட் செய்யப்பட்டது.

வீட்டுக்குள் miss ஆன போட்டியாளர்கள்..

இந்த பிக் பாஸ் 8 போட்டியில் தயாரிப்பாளர் ரவீந்தர் தொடங்கி ஆர் ஜே ஆனந்தி, தர்ஷா குப்தா வரை மொத்தம் 18 போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி அவர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்த காமெடியன் டி எஸ் கே மற்றும் சவுண்ட் சரோஜா, நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் போன்றவர்கள் போட்டியாளராக வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து பிக் பாஸ் 8 வீடு போட்டியாளர்கள் நிறைந்த வீடாக மாறி இருப்பதோடு எதிர்பாராத திருப்பங்களை எப்போது வேண்டுமென்றாலும் சந்திக்கலாம். அதற்கான தயார் மனநிலையில் தான் போட்டியாளர்கள் உள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்து விட்ட நிலையில் இன்று மாலை பரபரப்பான அதன் தொடக்க விழா நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் மிஸ் ஆன போட்டியாளர்கள் குறித்து தெரியாத சில பேருக்கு இணையத்தின் மூலம் இதைத் தெரிந்து கொண்ட இணையதள வாசிகள் இதனை தங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க தற்போது ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் ஒவ்வொருவருக்கும் உருவாகி வருகிறது என்பதில் எந்த அளவும் சந்தேகம் இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version