பொம்பள பிள்ளைக்கிட்ட தனி கேம் ஆடுறீங்களோ? ஆர்னவோடு வந்த சண்டை.. கேமை துவங்கிய தர்ஷா குப்தா!..

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்கிய முதல் ஒரு வாரம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. பெரிதாக சண்டைகள் கூட எதுவும் நடக்கவில்லை அதனால் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை பிக்பாஸில் விஜய் சேதுபதி பேசும்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை இருந்தால்தான் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். எனவே இன்னும் போட்டியை கலகலப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை மறைமுகமாக சுட்டி காட்டி இருந்தார்.

தனி கேம் ஆடுறீங்களோ

அதனை தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. இருந்தாலும் சௌந்தர்யா, ஆர்.ஜே ஆனந்தி மாதிரியான போட்டியாளர்கள் இன்னமும் மக்கள் விரும்பும் வகையில் எதுவுமே செய்யாமல் இருந்து வருகின்றனர்.

இப்படியே அவர்கள் இருந்து வந்தால் சீக்கிரமே எலிமினேட் ஆகி விடுவார்கள் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த போட்டியில் இருக்கும் சீரியல்  நடிகர் ஆர்னவ் குறித்து ஏற்கனவே மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

ஆர்னவோடு வந்த சண்டை

இந்த நிலையில் பிக் பாஸுக்குள் சென்ற பிறகும் கூட அவருக்கு அதே மாதிரியான பிரச்சனை நிலவி இருக்கிறது. ஆண்கள் டீமில் தற்சமயம் பெண் அணியினரில் இருந்து ஒருவர் மட்டும் வர வேண்டும் என்ற விதிமுறையின் காரணமாக தர்ஷா குப்தா ஆண்கள் டீமில் இருந்து வருகிறார்.

அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ஆண் போட்டியாளர்கள் குறித்து தவறாக பேசியிருக்கிறார் ஆர்னவ் இந்த விஷயத்தை ஆண் போட்டியாளர்களிடம் சென்று கூறி இருக்கிறார் தர்ஷா குப்தா.

கேமை துவங்கிய தர்ஷா குப்தா

இதனால் கோபமடைந்த அருண் பிரசாத் ஆர்னவுடன் பெரிதாக சண்டையிட துவங்கியிருக்கிறார். மேலும் பெண் போட்டியாளர்கள் தர்ஷாவை அனுப்பும்பொழுதே ஆண் போட்டியாளர்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் அவர்களது ஒற்றுமையை கலைக்க வேண்டும் என்று கூறி தான் அனுப்பி இருந்தனர்.

அந்த வேலையை இப்பொழுது தர்ஷா குப்தா மிகச் சரியாக செய்து வருகிறார். வார இறுதியில் விஜய் சேதுபதி கூறும் வரையில் இது ஆண் போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் போட்டி தற்சமயம் சுவாரசியமாகி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version