மொத்த வன்மத்தையும் இறக்கியாச்சு போல… விஜய் சேதுபதியிடம் வாங்கி கட்டிக்கொண்ட அர்னவ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என்கிற தயக்கம் பலருக்கும் இருந்து வந்தது.

ஏனெனில் இதற்கு முன்பு கமல்ஹாசன் மிகச் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்திவிட்டு சென்றிருந்தார் என்பதால் இது எந்த அளவிற்கு விஜய் சேதுபதியால் நடத்திக் காட்ட முடியும் என்கிற சந்தேகம் இருந்தது.

ஆனால் அதை பூர்த்தி செய்யும் விதமாக விஜய் சேதுபதி மிகச் சிறப்பாகவே இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்று வருகிறார். மேலும் கமல்ஹாசனை விடவே இவர் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதாகவும் சிலர் கூறுகின்றனர்.

வன்மத்தையும் இறக்கியாச்சு போல

எப்படியோ மக்கள் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதை விரும்ப தொடங்கிவிட்டனர். இப்பொழுது சனி ஞாயிறுகளில் விஜய் சேதுபதிக்காக காத்திருக்க துவங்கியிருக்கின்றனர் மக்கள்.

இந்த நிலையில் இன்று வசமாக பிக் பாஸ் போட்டியில் விஜய் சேதுபதியிடம் சிக்கிய நபராக அர்னவ் இருந்து வருகிறார். அர்னவ் குறித்து ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்கள் இருந்து வருகின்றன. அது என்னவென்றால் அர்னவ் திருமணமான பிறகு தன்னுடைய மனைவியை கவனித்துக் கொள்ளாமல் தொடர்ந்து நடிகை அன்ஷிதாவுடன் தொடர்பில் இருந்ததாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

வாங்கி கட்டிக்கொண்ட அர்னவ்

அதற்கு தகுந்தார் போல அவரது மனைவி பேட்டி கொடுக்கும் பொழுது அவரும் இந்த விஷயங்களை பேசி இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் தற்சமயம் அன்சிதா மற்றும் அர்னவ் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவானது தெரிய துவங்கியிருக்கிறது.

அதனால் இவர்கள் தொடர்ந்து அர்ணவை வெறுக்க துவங்கியிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் இன்று அதற்கு அர்னவை பழிவாங்கி விட்டனர். இன்று விஜய் சேதுபதி ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட விருதுகளை மாற்றி ஒருவருக்கு கொடுப்பது என்றால் யாருக்கு கொடுப்பீர்கள் என்று கேட்டார்.

போட்டியாளர்களின் திட்டம்

அதற்கு முத்துக்குமரனில் துவங்கி ஜெஃப்ரி வரை எல்லோருமே அர்னவையே பரிந்துரை செய்தனர். இப்படி கட்டம் கட்டி அடித்து விட்டனரே என்று நினைத்த விஜய் சேதுபதி இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அர்ணவிடம் கேட்டார்.

அதற்கு மிகவும் பெருமையாக நினைக்கிறேன் என்று கூறினார் அர்னவ். அதனால் கடுப்பான விஜய் சேதுபதி இதில் பெருமை என்ன கிடக்கு என்று மூஞ்சியில் அடித்தார் போல கேட்டு விட்டார். இதனை அடுத்து அர்னவ் வெளியில் வந்தவுடன் எவ்வளவு விமர்சனங்களை பெற போகிறார் என்பதுதான் தெரியாத விஷயமாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version