அர்ணவ்வை கண்டித்த VJS..! எல்லை மீறிய அர்ணவ் கோவப்பட்ட விஜய் சேதுபதி..!

பிக் பாஸ் போட்டியில் பிரபல சின்னத்திரை நடிகர் அர்ணவ் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவியும் சக சீரியல் நடிகையுமான திவ்யாவை அவருக்கு ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு வேறு ஒரு நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு டேக்காக கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனவர்.

அர்ணவ்வின் உண்மையான பெயர் அம்ஜத் கான். இதன் பிறகு ஏற்பட்ட சர்ச்சைகள் அர்ணவ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டது இதெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கும். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த அர்ணவ்விடம் நடிகர் விஜய் சேதுபதி கோவப்பட்டு பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேசு பொருளாகி வருகிறது. அர்ணவ்வை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி முதலில் அவருடைய வீடியோவை பிளே செய்யுமாறு கூறினார். வீடியோ முடிந்த பிறகு விஜய் சேதுபதி அர்ணவ்வை கேள்வி கேட்கும் முன்பே அர்ணவ் விஜய் சேதுபதியை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.

நான் தான் உங்களை கேள்வி கேட்க வேண்டும். ஆனால் முந்திக்கொண்டு நீங்கள் என்ன கேள்வி கேட்கிறீர்கள்..? அப்படி என்றால் நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரா..? அப்படினா நீங்கள் இந்த பக்கம் வந்து விடுங்கள்.. நான் அந்த பக்கம் போய் விடுகிறேன்.. என்று விஜய் சேதுபதி கூறவே, இடம் மாற்றி இருவரும் நின்றுனர்.

நடிகர் விஜய் சேதுபதி தன்னை கலாய்க்கிறார் என்று கூட தெரியாமல் நிஜமாகவே விஜய் சேதுபதி இடத்தில் அர்ணவ் போய் நின்று கொண்டு விஜய் சேதுபதியை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். விஜய் சேதுபதி குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.

அடப்பாவி தன்னை கலாய்க்கிறோம் என்று கூட தெரியாமல் இப்படி கிரிஞ்ச் பண்றானே என்று மனதில் நிறுத்தி இருப்பார் போல் தெரிகிறது. உடனே மீண்டும் அவர் அவருடைய இடத்துக்கு போய் நின்ற பிறகு அர்ணவ்வின் குணம் என்ன..? என்பது பற்றி வினாவினார்.

அப்போது நான் எந்த பிரச்சினையாக இருந்தாலும் எதிர்த்து குரல் கொடுக்கக் கூடியவன் எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக பேசி விடுவேன் என பேசினார் அர்ணவ். அப்போது விஜய் சேதுபதி உங்களைப் போலவே குணாதியத்துடன் வீட்டுக்குள் யாராவது முகத்திற்கு நேராக பேசும் பழக்கத்தை இருந்தால் அவர்களுடன் உங்களுடைய தொடர்பு எப்படி இருக்கும் என கேட்டார்.

அதற்கு அர்ணவ் ஒரு கை மோதி பார்த்து விட வேண்டியது தான். ஆம்பள சார் என்று கூறினார். அது என்ன மோதி பார்க்கிறதுல ஆம்பள, பொம்பள,, தைரியத்துல என்ன ஆம்பள, பொம்பள என்று கடுப்பான முகத்துடன் அர்ணவ்வை பார்த்து கோபப்பட்டார் நடிகர் விஜய் சேதுபதி.

மேலும் தைரியம் கோபம் இவை இரண்டும் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் சமமானது. இதில் நான் ஆண். நான் ஆம்பளை.. என்று கூறுவதில் என்ன பெருமை என தெரியவில்லை.

நான் உங்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ் கூறுகிறேன். நீங்கள் நன்றாக விளையாடக் கூடியவர் என்று தெரிகிறது. ஆனால் அது உங்கள் வாயால் கெட்டுப் போய் விடுமோ என்று நினைக்கிறேன் வாய கட்டுப்படுத்துங்கள் என்று கூறி பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ணவ்வை அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி.

இவருடைய இந்த நடவடிக்கை குறித்து உங்களுடைய பதிலை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam