பொண்டாட்டி சொல்லியும் கேட்கல.. இது தேவையா? இப்படியா பேசுவாங்க.. கதறி அழுத ரவீந்தர்!

தற்போது விஜய் டிவியில் மிகவும் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் சீசன் 8 கலை கட்டி வருகிறது. இந்த சீசனை எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருவதோடு மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு பெயரை பிடித்துக் கொண்டார்.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த பிக் பாஸ் வீட்டில் எப்போதும் சண்டைகளுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லக்கூடிய அளவு இந்த சீசன் 8 சண்டைகளுக்கு விதிவிலக்கு இல்லை என்று சொல்லலாம்.

பொண்டாட்டி சொல்லியும் கேட்கல.. இது தேவையா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்றைய எபிசோடில் போட்டியாளர்கள் எல்லோரிடமும் கலந்து பேசி இருக்கிறார். அப்போது ரவீந்தர் பிராங்க் செய்த பிறகு மற்றும் அதனால் வந்த மனக்கசப்பு ஆகியவற்றைப் பற்றி விரிவாக பேசினார்.

அப்போது பேசிய ஆர் ஜே ஆனந்தி ரவீந்தர் மற்றும் நடிகர் ரஞ்சித் இருவரும் சண்டை போடுவது டிராமாவாக இருக்குமோ என்று ஆரம்பத்தில் சந்தேகம் ஏற்பட்டதாக தனது கருத்தை கூறியதை அடுத்து அனைவரும் என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்க ஆவலானார்கள்.

அந்த வகையில் ரவீந்தர் பொதுவாக உட்கார்ந்த படியே இருப்பார். தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டுமென்றால் கூட அதை யாராவது எடுத்துத்தான் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். எப்போதும் எழுந்து நடக்க முயற்சி செய்யாத மனிதன் ஒரு தடவை எந்திரிச்சு பிராங்க் செய்ய நின்றார் என்றால் அது ஒரு சாதாரண விஷயமா.

இப்படியெல்லாம் பிராங்க் செய்ய எழுந்து நிக்க கூடிய மனிதர் எங்களிடம் வேலை வாங்கும் போது அவரே எழுந்து குடிக்க தண்ணீரை எடுத்து குடித்து இருக்கலாம் என்று தோன்றியதோடு இப்படி வச்சு செஞ்சிட்டாரே என நினைக்கத் தோன்றியதாக ஆனந்தி கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த பேச்சினை கேட்ட ரவீந்தர் சற்று அறிந்து போய் ஏற்கனவே தன் மனைவி பிக் பாஸ் வீட்டுக்கெல்லாம் போக வேண்டாம். நீங்க அங்க ரொம்ப கஷ்டப்படுவீங்க என்று சொன்னாங்க ஆனா அதையே கேட்காம வந்தது தப்பா போச்சு என்று மனதளவில் நினைத்து மனம் நொந்தார்.

இப்படியா பேசுவாங்க.. கதறி அழுத ரவீந்தர்..

இந்நிலையில் போட்டியாளர்களிடம் கடந்து பேசிய விஜய் சேதுபதி ஷோ முடித்துவிட்டு சென்ற பிறகு ரவீந்தர் ஆர்ஜே ஆனந்தி சொன்ன விஷயங்களைப் பற்றி மீண்டும் நினைவு கூர்ந்து அழுக ஆரம்பித்து விட்டார்.

இவ்வளவு பெரிய மனிதர் இப்படி கண்ணீர் விட்டு கதறி எழுவார் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. கால் வலி ஏற்பட்டதனால் தான் உட்கார்ந்து கொண்டு வேலை வாங்கினேன் என்று சொல்லிவிட்டார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? மகாலட்சுமி சொன்னது தான் நினைவிற்கு வந்தது.

மேலும் இப்படியெல்லாம் நடக்கும் என்று தான் அன்றே அவள் வேண்டாம் என்று சொன்னால் என கதறி அழுதார் அத்தோடு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னப் பிள்ளையை போல் அழுததை பார்த்து அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version