கூட்டத்துல பேசினா பைத்தியமாகணும்.. BB 8 செகண்ட் புரோமோ பரபரப்பு வீடியோ..

இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 வரை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியதை அடுத்து தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் அறிமுக விழாவிலேயே தனது நேர்த்தியான தொகுத்து வழங்கும் தன்மையை வெளிப்படுத்திய ஜன ரஞ்சகமாக வெளிப்படுத்தியதை அடுத்து இவருடன் அனைத்து போட்டியாளர்களும் சகஜமாகவும் நட்போடும் பழகுவார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்தது.

விஜய் டிவியில் பிரமாண்டமாக நடக்கும் பிக் பாஸ் சீசன் 8 தற்போது பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. அந்த வகையில் நான்காவது நாளான இன்று முதல் புரொமோவில் நாமினேஷன் செய்யப்பட்ட நபர்களில் யார் வெளியிடுவார்கள் என்பது குறித்து பேச்சுக்கள் அடிபட்டது.

இந்நிலையில் இருந்த போட்டியில் போட்டியாளர் சௌந்தர்யா ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகியோர் ஒரு பெயர்கள் குறிப்பிடப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது புரொமோ வெளியாகியிருப்பது ரசிகர்களின் மத்தியில் ஆவலை அதிகரித்துள்ளது.

இரண்டாவது புரோமோ வீடியோவில் அனைத்து போட்டியாளர்களும் ஒரே இடத்தில் இருக்கும் போது நாமினேஷன் குறித்து பேசி அவர்கள் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். அப்போது இது போன்ற விஷயத்தை தனியாக பேசாமல் கும்பலாக எதற்கு பேச வேண்டும் என்று அர்னவ் கேட்டிருக்கிறார்.

அத்தோடு கூட்டத்தில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது பேசினால் பைத்தியம் பிடித்தது போல் ஆகும் என்னால் கத்தம் முடியாது. எங்கு பேச வேண்டுமோ அங்கு தான் நான் பேசுவேன் என சௌந்தர்யா கூறியிருக்கிறார்.

மேலும் தன்னால் அனைவரைப் போல தெளிவாக பேசத் தெரியாது என சௌந்தர்யா கூற உனக்கு பேச தெரியாதா? என்று சுனிதா பதிலடி கொடுக்க நான்காவது நாள் புரோமோ வெளி வந்து பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த வீடியோவை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்கள் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version