வலியில் துடித்த சாச்சனா.. எரிகிற தீயில எண்ணெய் ஊற்றின மாதிரி கேர்ள்ஸ் டீம் ஆடிய ஆட்டம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் கடந்த அக்டோபர் 6-ம் தேதி தனது எட்டாவது சீசனை கோலாக்கலமாக ஆரம்பித்ததோடு இந்த சீசனில் தற்போது 16 நாட்கள் கடந்து விட்ட நிலையில் மொத்தம் 16 போட்டியாளர்கள் மட்டுமே இதில் விளையாடி வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது பரபரப்பான நகர்வுகள் நகர்ந்து வருகின்ற வேளையில் வயிற்று வலியால் துடித்துப்போன சாச்சனா பற்றி கேர்ள்ஸ் டீமில் இருந்த நபர்கள் அக்கறை செலுத்தாத போதும் அருண் பிரசாந்த் காட்டிய பரிவால் அவரை பலி கெடாவாக மாற்றி இந்த ஆட்டத்தை சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

வலியில் துடித்த சாச்சனா..

முதல் இரண்டு வாரங்கள் நடந்த பரபரப்பான போட்டியில் நடந்த எலிமினேஷன் சுற்றில் ரவீந்தர் மற்றும் மரணம் வெளியேற்றப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இதை அடுத்து 16 போட்டியாளர்களோடு இந்த போட்டி தற்போது விளையாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் 8 பேர் இடம் பிடித்துள்ள நிலையில் ஆண்கள் அணியில் இருக்கும் ஆண்களை பெண்கள் பங்கம் செய்யக்கூடிய நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.

மேலும் ஆண்கள் வெர்சஸ் பெண்கள் என்ற தீம்மில் நடத்தப்படும் போட்டிகள் மட்டுமின்றி வீட்டின் நடுவே போடப்பட்டிருக்கும் பாகப்பிரிவினை கோடும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி இருப்பதோடு நிமிடத்திற்கு நிமிடம் திரில்லிங்கான அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளது.

அதிலும் இரண்டு டீம்களாகத் பிரிந்திருந்தாலும் அதில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர் மட்டும் வாரா வாரம் அணி மாறி விளையாடுவது அட்டகாசமாக உள்ளது. இந்நிலையில் பெண்கள் டீமில் இருந்து சாச்சனா ஆண்கள் அணிக்காகவும் ஆண்கள் அணியில் இருந்து ஜெஃப்ரி பெண்கள் அணிக்காகவும் விளையாடுகிறார்கள்.

இந்நிலையில் சாச்சனாவிற்கு இந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது வயிற்று வலியால் துடித்த இவரை ஆண்கள் அணியை சேர்ந்த அருண் பிரசாத் கவனித்துக் கொண்டதை அடுத்து பெண்கள் டீம் அவரை கன்பெஷன் ரூமுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

எரிகிற தீயில எண்ணெய் ஊற்றின மாதிரி கேர்ள்ஸ் டீம் ஆடிய ஆட்டம்..

இதைக் குறிப்பிடத்தக்க விஷயம் என்று என்னவென்றால் பிக் பாஸ் இன் விதிமுறைப்படி யாரும் அனுமதியில்லாமல் போட்டிருக்கும் கோட்டை தாண்டக்கூடாது. ஆனால் அருண் பிரசாத் சாச்சனாவின் மீது இரக்கப்பட்டு கோடு தாண்டி விளையாடி விட்டார்.

இதை வைத்து சம்பவம் செய்திருக்கும் பெண்கள் அணி அருண் ரூல்ஸ் மீறியதால் நாமினேஷன் ஃப்ரீ பாஸை ரத்து செய்யப் போவதாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதை அடுத்து எரிகின்ற தீயில் என்னை ஊற்றியது போல் இந்த விஷயம் பற்றி இருக்கிறது.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மனசாட்சி இல்லாமல் மனிதத் தன்மை இல்லாமல் இப்படி விளையாடும் பெண்களை காட்டி இது சரியான அழுகுணி ஆட்டம் என்று சொல்லி வருவதோடு அவர்களை வறுத்து எடுத்து வருகிறார்கள்.

இதை எடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் அருண் பிரசாத் குறித்து நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version