பிக் பாஸ் சீசன் 8 யாருக்கு ஆர்மி ஆரம்பிப்பாங்க? Fat Man டூ பவித்ரா ஜனனி ஓர் அலசல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நேற்று அதகளமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதல் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக தன் பணியை சீரும் சிறப்புமாக செய்திருந்தார்.

ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற வசனத்துக்கு ஏற்ப ஆரம்பமே அசத்தலாக பல புதுமைகளோடு முதல் எபிசோட் ரசிகர்களின் மனதில் நிலைக்க கூடிய வகையில் இருந்தது என்று சொல்லலாம்.

பிக் பாஸ் சீசன் 8 யாருக்கு ஆர்மி ஆரம்பிப்பாங்க?

ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 7 நிலைகளை கடந்து விட்ட நிலையில் இந்த சீசன் அனைத்தையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிகழ்ச்சியானது பல போட்டியாளர்களுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கையை பெற்றுத்தரக் கூடிய பிளாட்பார்ம் ஆக அமைந்தது.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 8 புதிய போட்டியாளர்கள், புதிய வீடு, விதிகள் எல்லாம் புதிதான நிலையில் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆவலை அதிகரிக்க கூடிய வகையில் இருந்தது.

விஜய் டிவி தற்போது புதிதாக களம் இறக்கி இருக்கும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி எப்படி இந்த நிகழ்ச்சியை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் அதிகரித்து இருந்த நிலையில் தனது பாணியில் நிகழ்ச்சியை மிக நேர்த்தியான முறையில் கையாண்டு இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி கனிவோடு பேசிய விதம் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களிடம் நண்பனாக உரையாடிய விதம் பிளஸ் ஆக அமைந்துவிட்டது.

இந்நிலையில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்ட நிலையில் அதில் போட்டியிடக் கூடிய முக்கிய போட்டியாளராக பேட்மேன் ரவீந்தர், தர்ஷா குப்தா, ரஞ்சித் மற்றும் பவித்ரா ஜனனி இவர்களில் யாருக்கு ஆர்மி ஆரம்பிக்கப்படும் என்ற விஷயங்கள் தற்போது வெகுவேகமாக பரவி வருகிறது.

Fat Man டூ பவித்ரா ஜனனி..

ஆரம்பத்திலேயே பேட்மேன் ரவீந்தர் தன்னுடைய அபார பேச்சுத் திறமையை அடிக்கடி வெளிப்படுத்தி அசர வைத்ததோடு இவரால் பிக் பாஸ் வீட்டில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லக்கூடிய அளவில் தன்னுடைய நகர்வுகளை ஆரம்பித்திருக்கிறார்.

மேலும் தர்ஷா குப்தா, ரஞ்சித், பவித்ரா ஜனனி போன்ற போட்டியாளர்களின் நேர்த்தியான அணுகுமுறை கண்டிப்பாக பிக் பாஸில் பிரதிபலிக்கும் என்று சொல்லப்படும் நிலையில் இவர்களில் யாருக்கு ரசிகர்கள் ஆர்மி அமைக்க இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எனினும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறியுள்ளது. ஆர்மி அமைப்பதற்கான கருத்துக்கணிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களின் மத்தியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam