சின்னத்திரையில் மிகவும் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிகழ்ச்சியை காணக்கூடிய அதிக அளவு ரசிகர்கள் தமிழில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியினை பல்வேறு மொழிகளில் முன்னணி நட்சத்திரங்கள் பல தொகுதி வழங்கி வருவதை அடுத்து பல சீசன் களாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.
பிக் பாஸ் யாருக்கு அதிக சம்பளம்..
கடந்த சில வாரங்களுக்கு முன் பிக் பாஸ் சீசன் 8 தெலுங்கில் துவங்கியது இதை தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இதை அடுத்து போன வாரம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 8-ம் துவங்கியது.
அது போலவே ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 18 துவங்கியது. அது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம். இந்த நிலையில் இவர்கள் தரக்கூடிய சம்பள விவரம் தற்போது இணையங்களில் வெளிவந்து அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.
எனவே தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பெறக்கூடிய சம்பளம் என்னென்ன என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் முதலில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவரும் வேளையில் அவருக்காக 60 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது என்ற விஷயம் தற்போது கசிந்துள்ளது.
வெளியான புல் லிஸ்ட்..
மேலும் இது வரை விஜய் டிவி ஒளிபரப்பு செய்த பிக் பாஸ் சீசன் 1 முதல் சீசன் 7 வரை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அவருக்கு சம்பளமாக எவ்வளவு தொகை கொடுத்து இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் உறைந்து போவீர்கள் அவர் சம்பளமாக பெற்ற தொகை ரூபாய் 130 கோடி என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனாவுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொல்லப்பட்டு வரும் வேளையில் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18 தொகுத்து வழங்கும் சல்மான் கான் ஒரு மாதத்திற்கு 60 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.
அந்த வகையில் சுமார் மூன்று மாதங்கள் தொடர்ந்து நடக்கக்கூடிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சல்மான் கான் மட்டும் ரூபாய் 180 கோடி சம்பளமாக வாங்குகிறார் என்றால் கொஞ்சம் நினைத்து பாருங்கள் கேட்டதுமே தலை சுற்றுகிறது அல்லவா.
இந்த விஷயம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.