பிக் பாஸ் போட்டி தொடங்கிய முதல் நாள் வெறும் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே சென்ற நிலையில் தன்னுடைய பகடி ஆட்டத்தை தொடங்கினார் பிக்பாஸ்..
அதாவது பிக்பாஸ் வீட்டில் இரண்டு படுக்கை அறை ஏரியாக்கள் இருக்கிறது. இதில், எந்த ஏரியாவில் ஆண்கள் தங்குவது.. எந்த ஏரியாவில் பெண்கள் தங்குவது என்ற முடிவை போட்டியாளர்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், போட்டியாளர்கள் எடுக்கக்கூடிய முடிவு ஒருமனதாக இருக்க வேண்டும் என்று கொளுத்தி போட்டார் பிக்பாஸ். ஆனால், அங்கு இருக்கக்கூடிய இரண்டு படுக்கையறை ஏரியாவில் ஒரு ஏரியாவில் மட்டும்தான் சகல வசதிகளும் இருக்கிறது.
இரட்டை படுக்கை வசதி இருக்கிறது… பெரிய கட்டில்கள் இருக்கின்றன என்பது போல் தெரிகிறது. இதனால் ஆண்கள் பெண்கள் என இரு தரப்பு போட்டியாளர்களுக்கும் கடுமையான விவாதம் ஏற்பட்டது.
அப்போது பேசிய ஆர்.ஜே ஆனந்தி நீங்கள் ஆம்பளைங்களுக்கு என்ன வேணும் என்ற பாயிண்டில் இருந்து பார்க்கிறீர்கள். ஆனால், ஒரு பெண்ணாக எங்களுக்கு என்ன வசதிகள் தேவை..? என்பதை நாங்கள் பார்க்கிறோம் என்று ஃபேட்மேன் ரவீந்தரிடம் எகிறுகிறார்.
ஆனால், ஃபேட்மேன் ரவீந்தர் பொறுமையாக அவரை ஹேண்டில் செய்கிறார். இறுதியாக இருவரும் இரு தரப்பினரும் ஒரே பெட்ரூம் ஏரியாவை கேட்டதால் கடுப்பான பிக் பாஸ் நீங்கள் எடுத்த முடிவு சரியானது கிடையாது.
ஆளுக்கு ஒரு படுக்கையாக படுக்கையறை ஏரியாவாக கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஒரே படுக்கை அறை ஏரியாவை கோருவதால் கார்டன் ஏரியாவில் உள்ள சோபாவில் சென்று அமருங்கள்.
Yennada idu First Day First show maari, First day first fight’ah 🔥🤣🤣🤣#BiggBossTamilSeason8 #biggboss8tamil #BiggBossTamil #VijaySethupathi pic.twitter.com/VvevjbP6A4
— Sakthivel (@SAKTHIVEL_VJ1) October 6, 2024
அங்கே அமர்ந்திருக்கும் பொழுது நீங்கள் யாரும் ஒருவருடன் ஒருவர் பேசக்கூடாது என்று தண்டனை கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் முதல் நாளே கொளுத்தி போட்டு விட்டீர்களே பிக் பாஸ் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.