“நீ போடா மொதல்ல..” பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதியுடன் மல்லுக்கட்டிய போட்டியாளர் ரவீந்தர்..!

பிக்பாஸ் 8-வது சீசன் நிகழ்ச்சி அதே பரபரப்புடன் கோலாகலமாக இன்று தொடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று கொண்டிருக்கிறார்கள். அதில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனரும் பிரபல யூ-ட்யூப் விமர்சகருமான ரவீந்திரம் ஒருவர்.

இவர் பிரபல சீரியல் நடிகையும் தொகுப்பாளினியுமான மகாலட்சுமியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பிக்பாஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார்.

ஏற்கனவே சமீபத்தில் வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட ரவிந்தர் என்னால் அமர முடியாது யாருடைய துணையும் இல்லாமல் எழ முடியாது என்றெல்லாம் பேட்டியில் கூறி தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இவர் எப்படி தாக்கு பிடிக்க போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  இவரை அறிமுகம் செய்த போது விஜய் சேதுபதி அவரிடம் சில கேள்விகளை கேட்டார். அதற்கு சலிக்காமல் பதில் கொடுத்து விஜய் சேதுபதி உடன் மல்லு கட்டினார் தயாரிப்பாளர் ரவிந்தர்.

விஜய் சேதுபதி ரவீந்திரிடம் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் பொழுது பிக்பாஸ் போட்டியாளர்களை பற்றி பல்வேறு விமர்சனங்களை செய்து இருக்கிறீர்கள் எத்தனை சீசன்களாக இதனை செய்து கொண்டிருக்கிறீர்கள்..? எத்தனை வருடமாக செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரவீந்தர்… நான் கடந்த ஏழு சீசனுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடையும் விமர்சனம் செய்து வருகிறேன் என கூறினார். அதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இப்போது நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விட்டீர்கள். இனிமேல் யார் விமர்சனம் செய்வார்கள்..? அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறீர்களா..? என்பது போல கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ரவீந்தர் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருந்து விமர்சனம் செய்வதை பார்த்து ரசிகர்கள் மற்ற போட்டியாளர்களை நீ எப்படி எல்லாம் விமர்சனம் பண்ண நீ போடா மொதல்ல உள்ள அதுக்கப்புறம் நாங்க பாத்துக்கிறோம் என்று என்னை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று மேடையிலேயே பதில் கொடுத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version