பிக்பாஸ் முடியுற வரைக்கும் இதை பண்ணக்கூடாது..! விஜய் சேதுபதிக்கே ரூல் போட்டாச்சா!.. என்னன்னு கேட்டா ஆடி போயிடுவீங்க..!

சின்னத்திரையில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு சில நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு வருடங்களாக தமிழில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்து வருகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கும் பெரிய வரவேற்பை இந்த நிகழ்ச்சி பெற்றுக் கொடுக்கிறது. பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள் சினிமாவில் வரவேற்பை இழந்த பிரபலங்களாகதான் இருப்பார்கள்.

இதை பண்ணக்கூடாது

ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொள்ளும் பொழுது அது அவர்களுக்கு மீண்டும் பிரபலத்தை பெற்று கொடுக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுக்க ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் இவர்களுக்கு அதில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இதன் மூலமாக நிறைய பேர் நடிகனாகியும் இருக்கின்றனர். நடிகர் கவின் மாதிரியான ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை பயன்படுத்திக் கொண்டு அதன் மூலமாக சினிமாவில் பிரபலம் அடைந்து இருக்கின்றனர்.

விஜய் சேதுபதிக்கே ரூல் போட்டாச்சா

இதற்காக ஒவ்வொரு முறை பிக் பாஸ் நடத்தப்பட்ட பொழுதும் நடிகர் கமல்ஹாசனுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

அவர் அனிமேஷன் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என கமல் கூறிவிட்டார். இந்த நிலையில் தற்சமயம் விஜய் சேதுபதிதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

கேட்டா ஆடி போயிடுவீங்க

விஜய் சேதுபதி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் இந்தியா என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். எனவே இந்த நிகழ்ச்சியையும் அவர் நன்றாக தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு நடுவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் விஜய் சேதுபதிக்கு ஒரு விதிமுறை போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது அதாவது விஜய் சேதுபதி தொடர்ந்து சின்ன திரைப்படங்களுக்கு நிறைய உதவிகளை செய்து வரக்கூடியவர்.

இந்த பிக் பாஸ் நடக்கும் 100 நாட்களிலும் விஜய் சேதுபதி எந்த படங்களுக்கும் சமூக வலைதளங்களில் எந்தவித ப்ரோமோஷன் பதிவும் செய்யக்கூடாது என்று விதிமுறை போடப்பட்டுள்ளது இதனால் சின்ன திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு இழப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version