பிக்பாஸ் 8 : விஜய் சேதுபதி சம்பளம் எவ்வளவு தெரியுமா..? கிறுகிறுன்னு வருதே..!

பிக்பாஸ் 8 : பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மட்டுமில்லாமல் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர்கள் எத்தனை நாட்கள் அந்த வீட்டில் தாக்கு பிடிக்கிறார்கள் என்பதை பொறுத்து ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் என ஆளுக்கு ஏற்றார் போல நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதில் அதிகபட்ச சம்பளம் வாங்குபவர் என்றார் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்ககூடிய தொகுப்பாளர் தான். கடந்த ஏழு சீசன்களாக நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

தற்போது சில காரணங்கள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் விலகி விடவே நடிகர் விஜய் சேதுபதி அந்த இடத்தை நிரப்பி இருக்கிறார். அக்டோபர் 6-ம் தேதி பிக்பாஸ் சீசன் 8 தொடங்க இருக்கிறது.

சினிமா டிவி வெப் சீரிஸ் மாடலிங் என பலதரப்பட்ட துறைகளில் இருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

எனினும் இறுதிப்பட்டியல் ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் தெரிய வரும் இணையத்தில் வரக்கூடிய தகவலின் படி நடிகர் ரஞ்சித் சீரியல் நடிகைகள் பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா, அன்ஷிதா,  ஐஸ்வர்யா உள்ளிட்டோர் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்கிறார்கள் என நம்முடைய தமிழகம் முகநூல் பக்கத்தில் ஏற்கனவே தகவலை வெளியிட்டிருந்தோம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 100 நாட்கள் அந்த போட்டியை பிரச்சனைகளை தாக்கு பிடித்து வெற்றி பெறுபவருக்கு 50 லட்சம் பரிசு மற்ற போட்டியாளர்களுக்கு எத்தனை நாட்கள் இருக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல சம்பளம் வழங்கப்படும்.

புது முகங்கள் மற்றும் விஜய் டிவியில் இருந்து வரக்கூடிய பிரபலங்களுக்கு சம்பளம் பெரிதாக இருக்காது என்று கூறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளருக்கு எவ்வளவு சம்பளம் கமல்ஹாசன் ஒரு சீசனுக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது 8-வது சீசன் தொடங்க இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட உள்ள ஊதியம் குறித்து நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இந்த சீசனை தொகுத்து வழங்குவதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு 18 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் பிக் பாஸ் வீடு அமைந்திருக்கும் சென்னை பூந்தமல்லி இவிபி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் அரங்கிற்கு வரவேண்டும்.

அங்கு நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். அதன்படி நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நடக்கும் 100 நாட்களுக்கும் சேர்த்து சுமார் 15 நாள் வரை சூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார்.

சனி,ஞாயிறு ஒளிபரப்பாகும் வார இறுதி எபிசோடுகள் காட்சியில் ஒரே நாளில் படமாக்கப்பட்டு விடும். அதன்படி 15 வாரம் ஒளிபரப்பாகும். ஒட்டுமொத்தமாக 15 நாட்கள் சூட்டிங் இருக்கும் 15 நாட்களுக்கு 18 கோடி சம்பளம் பேசியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

சினிமா வெப் சீரிஸ் என எல்லாவற்றிலும் நடிகராக தோன்றிய விஜய் சேதுபதி தற்போது பிக் பாஸிலும் தோன்றியிருக்கிறார். இதற்கு முன்பே சமையல் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது போல.. பிக்பாஸில் கலந்துக்கொள்ள போகும் 16 பேர்.. வெளிவந்த அதிகாரபூர்வ லிஸ்ட்.. இதோ.!

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. விஜய் …