அவசரப்பட்டியே குமாரு… வாயை விட்ட தர்ஷிகா.. வச்சி செஞ்ச விஜய் சேதுபதி.. தேவையா இது?.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் துவங்கியது முதலே மற்ற சீசன் அளவிற்கு பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதற்கு முக்கிய காரணம் பிக் பாஸில் இந்த முறை இருக்கும் போட்டியாளர்களே என்று கூறப்படுகிறது.

பொதுவாக பிக் பாஸில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இடையே நிகழ்ச்சி துவங்கிய சில நாட்களிலேயே சண்டைகள் துவங்கிவிடும். இந்த அடிதடி சண்டைகள்தான் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சியை அதிக பிரபலம் ஆக்கி வருகின்றன.

அவசரப்பட்டியே குமாரு

இதற்காகவே சிலர் வேண்டுமென்றே சண்டை போடுவதும் உண்டு. வனிதா விஜயகுமார் போன்றவர்களெல்லாம் பிக் பாஸில் அதிகமாக சண்டை போட்டதன் காரணம் இதுதான். அப்படி இருக்கும் பொழுது இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே போட்டிகளில் சண்டை இல்லாமல் கலந்து கொண்டு வருகின்றனர் போட்டியாளர்கள்.

அவர்களுக்குள் சண்டை ஏற்படும் விதமாக போட்டிகளை அமைத்தாலும் கூட அவர்கள் சமரசம் செய்து கொள்கிறார்கள். முக்கியமாக ஆண்கள் அணியினரை சேர்ந்தவர்களில் அதிகபட்சம் சண்டையே வரவில்லை தொடர்ந்து அவர்கள் விளையாடும் பொழுது அவர்களுக்குள் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

வாயை விட்ட தர்ஷிகா

இதனை அடுத்து அடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் எல்லாம் அவர்களுக்குள் சண்டையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதி பிக் பாஸில் பேசும் பொழுது பவித்ராவை தர்ஷிகாவிடம் கோர்த்துவிட்ட சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது.

அதாவது ரஞ்சித்தை காப்பாற்றுவதற்காகதான் அந்த பிராங்கை செய்தார்கள் என்பது பவித்ராவுக்கு தெரியாது என்றுதான் பலரும் நினைத்து வந்தனர். பவித்ராவும் கூட அப்படித்தான் நடந்து கொண்டார் ரஞ்சத்துக்காக இந்த பேங்க் நடந்தது என்று தெரிந்தவுடன் அவர் கண்ணீர் விட்டு அழ துவங்கி விட்டார்.

வச்சி செஞ்ச விஜய் சேதுபதி

இந்த நிலையில் இதை குறித்து பேசிய விஜய் சேதுபதி உண்மையில் பவித்ராவிற்கு இந்த பிராங்க் ரஞ்சித்காகத்தான் செய்கிறார்கள் என்பது தெரியும். அந்த சமயத்தில் பவித்ரா அந்த அறையில்தான் இருந்தார் என்று கூறி அதை பவித்ராவிடமும் கேட்டிருக்கிறார்.

அதற்கு பவித்ரா ஆமாம் என்று கூறியிருக்கிறார். இதற்கு பதில் அளித்த தர்ஷிகா ஒரு வேலை பவித்ரா தெரிந்தே இதை செய்திருந்தால் அது தவறு சார் என்று விஜய் சேதுபதி இடம் கூறினார். ஆனால் அதற்கு முன்பே பேசும்போது அவர் விஜய் சேதுபதியிடம் குரலை உயர்த்தி பேசியிருந்தார் இந்த நிலையில் இதற்கு விஜய் சேதுபதி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது நிகழ்ச்சியை பார்த்தால்தான் தெரியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version