நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் வரும் தீபாவளியை ஒட்டி வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் பிரமோஷனுக்காக பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படம் இந்திய ராணுவம் சம்பந்தப்பட்டது. இந்திய ராணுவ வீரர் முகுந்த் என்பவருடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்டது ஆகும்.
உண்மைக் கதையை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எதிரி கிடைக்கிறது. விரைவில் இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தை பிரமோஷன் செய்வதற்காக வந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன் இந்திய ராணுவத்தை பெருமைப்படுத்தும் விதமாக தன்னுடைய சட்டையில் தேசிய கொடியை அணிந்திருந்தார்.
அதேபோல சக பிக் பாஸ் போட்டியாளர்களும் தேசியக்கொடி அணிந்து இருந்தார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தேசியக்கொடி BLUR செய்யப்பட்டது இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தியாவில் தானே இந்த நிகழ்ச்சி நடக்கிறது.. தேசிய கொடியை BLUR செய்யாமல் காட்டினால் என்ன ஆகிவிடப் போகிறது..? என்பதில் ஆரம்பித்து பலரும் தங்களுடைய விமர்சனங்களையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில் எதனால் BLUR செய்யப்பட்டது என்ற பல்வேறு காரணங்கள் உலா வருகின்றன. விளம்பர நோக்கத்திற்காக தேசிய கொடி எந்த இடத்திலும் பயன்படுத்தப்படக் கூடாது என்பது விதி.
ஒரு நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவோ..? ஒரு தயாரிப்பின் விளம்பரத்திற்காகவோ..? தேசியக்கொடியை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
இப்படி ஏற்கனவே தேசிய கொடியை தங்களுடைய விளம்பரத்தில் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் சிக்கலில் சிக்கி இருக்கின்றன. தண்டனங்களையும் பெற்று இருக்கின்றன.
இந்திய அரசு மற்றும் தேசம் சார்ந்த விளம்பரங்களில் மட்டுமே தேசியக்கொடி பயன்படுத்தப்படும். ஆனால், அமரன் திரைப்படம் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தானே தவிர அங்கு செய்யப்பட்டது முழுக்க முழுக்க அமரன் படத்திற்கான ஒரு விளம்பரமே ஆகும்.
ஒரு வேலை தேசிய கொடி BLUR செய்யப்படாமல் இருந்திருந்தால் நிச்சயமாக பிக் பாஸ் குழுவிற்கு மிகப்பெரிய சிக்கல் வந்திருக்கும். இதனை பொருட்படுத்திய தேசிய கொடியை BLUR செய்திருக்கிறது பிக்பாஸ் குழு என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.