அவ உள்ள போய் சகுனி வேலை பார்க்கணும்.. ஆண் டீமுக்கு எதிராக ஜாக்குலின் போட்ட திட்டம்..! சீரியல் ரேஞ்சுக்கு இறங்கிட்டாங்களே..!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் விளையாட வேண்டும் என்கிற விதிமுறை போடப்பட்டது. இது பலருக்குமே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்பு பிக் பாஸில் இந்த மாதிரி பிரித்து வைத்து போட்டி போட்டதே கிடையாது.

இப்பொழுது ஆண் போட்டியாளர்கள் குழு ஜெயிக்குமா? அல்லது பெண் போட்டியாளர்கள் குழு ஜெயிக்குமா? என்கிற ரீதியில்தான் பிக் பாஸ் போகத் துவங்கியுள்ளது. 16 நாட்களுமே பிக்பாஸ் இப்படி தான் நடக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

சகுனி வேலை பார்க்கணும்

இந்த நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு டீமும் மற்ற டீமை எப்படி காலி செய்வது என்பது குறித்த பேச்சுக்களில் இறங்கி இருக்கின்றனர். ஏற்கனவே வீட்டிற்கு உண்டான விதிமுறைகளை போட்டதில் பெண்களை அணியினர் சொதப்பிவிட்டனர்.

பிக் பாஸ் வரைமுறைக்குள் வரும் சில விஷயங்களை அவர்கள் விதிமுறையாக போட்டதால் அதெல்லாம் செல்லாது என்று கூறிவிட்டார் பிக் பாஸ். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை அவர்களது வீட்டில்தான் சமையலறை ஸ்டோர் ரூம் போன்றவை இருப்பதால் அதற்கு ஏற்ற தனித்தனி விதிமுறைகளை போட்டு பக்காவாக விளையாட துவங்கியிருக்கின்றனர்.

ஜாக்குலின் போட்ட திட்டம்.

இந்த நிலையில் நேற்று பெண் போட்டியாளர்களில் இருந்து ஒருவர் ஆண் வீட்டிற்கும் ஆண் போட்டியாளர்களில் ஒருவர் பெண் வீட்டிற்கும் வரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி ஆண் போட்டியாளர்களில் இருந்து முத்துக்குமார் பெண்கள் அணிக்கும் பெண்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் அணியில் இருந்து பவித்ரா ஆண்கள் அணிக்கும் வந்திருக்கிறார்.

போட்டி இப்படி சென்று கொண்டிருக்கும் பொழுது பவித்ரா போட்டியில் பெரிதாக விளையாடுவது போலவே தெரியவில்லை. அவர் தொடர்ந்து சாதாரணமாக விளையாடி வருகிறார். மக்கள் மத்தியில் தனிப்பட்ட வரவேற்பை பிடிப்பவர்கள்தான் தொடர்ந்து பிக் பாஸில் இருக்க முடியும்.

சீரியல் ரேஞ்சுக்கு இறங்கிட்டாங்களே

இதற்கு நடுவே சௌந்தர்யாவிடம் பேசிக் கொண்டிருந்த ஜாக்லின் கூறும் பொழுது பவித்ரா உள்ளே போய் சும்மா இருக்கிறாள். அதற்கு அந்த ஆண்கள் டீமில் ஏதாவது பிரச்சனையை கிளப்பி விடலாம். ஆண்கள் நேற்று ஸ்டோர் ரூமில் உப்பு எடுக்க மறந்துவிட்டனர்.

அதை ஒரு பெரிய பிரச்சினையாக இவள் நினைத்தால் மாற்றி இருக்கலாம் ஆனால் இவள் எதுவுமே செய்யாமல் இருக்கிறாளே என்று கூறி வந்துள்ளார் ஜாக்களின் இதை பார்த்த ரசிகர்கள் சீரியலில் வரும் சீரியலில் எப்படி குடும்பத்தை பிரிக்க திட்டம் போடுவார்களோ அதுபோலவே இவரும் அணியினரை பிரிக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று பேசி வருகின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version