இந்த வாரம் பிக்பாஸில் எலிமினேஷன் யார்.. இவங்கதான்னு பேச்சு இருக்கு..

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி கிட்டத்தட்ட நான்கு நாட்கள் முடிந்து விட்டன தொடர்ந்து இந்த வாரத்தின் இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இருக்குமா? இருக்காதா என்பது ஒரு கேள்வியாக இருந்து வந்தது.

ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை வாரத்திற்கு ஒரு எலிமினேஷன்தான் செய்யப்படும். அதுவும் மக்கள் ஓட்டு போடும் சதவீதத்தை பொறுத்துதான் இருக்கும். மக்கள் யாருக்கு அதிகமாக ஓட்டு போடுகிறார்களோ அவர்கள் பிக் பாஸை விட்டு வெளியேற மாட்டார்கள்.

பிக்பாஸில் எலிமினேஷன் யார்

குறைவான ஓட்டை பெற்ற கடைசி நபர்தான் எலிமினேஷன் ஆவார்கள் இந்த நிலையில் ஏற்கனவே நிகழ்ச்சி துவங்கிய பொழுது 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் ஆவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சாச்சனா எலிமினேஷன் செய்யப்பட்டார். நடிகை சச்சனா இதனால் மிகவும் வருத்தப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருந்தார். இதனால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவங்கதான்னு பேச்சு இருக்கு

ஆனால் அதனை உடைக்கும் வகையில் மீண்டும் சாச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று வந்திருக்கிறார்.  இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக பிக் பாஸில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் யார் அடுத்து பிக் பாஸில் இருந்து வெளியேறுவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. நிறைய பேர் ஒரு பக்கம் ரவீந்தர்தான் வெளியேறுவார் என்று கூறி வருகின்றனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை மிக என்டர்டைன்மென்டாக ரவீந்திர்தான் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்பதால் அவரை போட்டியிலிருந்து கண்டிப்பாக நீக்க மாட்டார்கள் .

எலிமினேஷன் அப்டேட்

பிக் பாஸில் எலிமினேஷன் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன அதன்படி பிக் பாஸ் ஓட்டிங்க்கைபொருத்தவரை அதில் அருண் பிரசாத் மற்றும் ஜாக்குலின் இவர்கள் இருவரும்தான் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல ரஞ்சித் அளவுக்கு கூட ஜாக்லினும் அருண் பிரசாத்தும் முதல் வாரத்தில் விளையாடவில்லை என்பது முக்கிய விஷயமாகும். எனவே இவர்கள் இருவரில் ஒருவர்தான் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. நாளை விஜய் சேதுபதி இது குறித்த முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam